சுடச்சுட

  

  : நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை இரண்டு நாளில் முடிவு செய்து அறிவிப்பேன் என காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

  காங்கிரஸ் வேட்பாளராக நாராயணசாமி அறிவிக்கப்பட்டதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்ணன் ஆதரவாளர்கள் பலர் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகி விட்டனர்.

  இந்நிலையில் முதல்வர் ரங்கசாமியும், அண்மையில் கண்ணனை சந்தித்துப் பேசினார். இதையடுத்து, அவர் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணனை தேர்தலில் ஆதரிப்பார் என தகவல்கள் வெளியாகின. ஆனால் கண்ணன் எம்பி தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

  இந்நிலையில் அவர் வெள்ளிக்கிழமை மாலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

  நான் காங்கிரஸ் கட்சி எம்பி தான். ஆனால் எனது அரசியல் வித்தியாசமானது. மக்கள், எனது ஆதரவாளர்கள் ஆகியோர் நலன் தான் எனக்கு முக்கியம். நாடாளுமன்றத் தேர்தல் குறித்து நான் எனது ஆதரவாளர்கள், பொதுமக்கள், நலன் விரும்பிகளுடன் தொடர்ந்து பேசி வருகிறேன். 2 நாள்களில் நல்ல முடிவை

  தெரிவிப்பேன்.

  எனது மனச்சாட்சியின்படி தான் செயல்படுவேன். எனக்குப் பதவி முக்கியம் கிடையாது. முன்பே அமைச்சர் பதவியையே ராஜிநாமா செய்தவன் என்றார் கண்ணன்.

  இதற்கிடையே காங்கிரஸ் வேட்பாளரும், மத்திய அமைச்சருமான நாராயணசாமி வெள்ளிக்கிழமை மாலை கண்ணனை சந்தித்துப் பேசுவதாக செய்தி பரவியது. ஆனால் அதுபோன்ற சந்திப்பு எதுவும் நடக்கவில்லை.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai