சுடச்சுட

    

    புதுவை அருகே லாரியில் வந்த ரூ.1.5 லட்சம் மதிப்பிலான புடவைகளை தேர்தல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

    புதுவை மாநிலம் திருக்கனூர் அருகே உள்ள கூனிச்சம்பட்டு சோதனைச் சாவடியில் வியாழக்கிழமை இரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரி மணிகண்டன் தலைமையில் வாகனச் சோதனை நடத்தினர். அப்போது புதுவை நோக்கி வந்த லாரியில் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான புடவைகள் இருந்தது தெரியவந்தது.

    புதுவையில் உள்ள கடைகளுக்கு விற்பனைக்காக புடவைகளை எடுத்துச் செல்வதாக அவர்கள் கூறினர். அதற்கான ஆவனங்களை சரிபார்த்த போது குறைபாடுகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, புடவையுடன் லாரியை தேர்தல் துறையினர் போலீஸில் ஒப்படைத்தனர். இது குறித்து திருக்கனூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai