சுடச்சுட

    

    வாக்குப்பதிவு இயந்திரங்கள் அண்ணா கலைக் கல்லூரிக்கு இடமாற்றம்

    By காரைக்கால்,  |   Published on : 12th April 2014 04:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரைக்கால் ஆட்சியரக வளாகத்தில் இருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள், பாதுகாப்புடன் அண்ணா அரசு கலைக் கல்லூரிக்கு வெள்ளிக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டன.

    காரைக்கால் மாவட்ட தேர்தல் துறை சார்பில் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தற்செயல் தெரிவு முறை இறுதிப் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர் அங்கமுத்து, மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான அ. முத்தம்மா முன்னிலையில் இது நடைபெற்றது.

    வாக்குச் சாவடிக்கு செல்லும் இயந்திரங்கள் பட்டியல் அரசியல் கட்சியினர் பார்வைக்கு காட்டப்பட்டது. இதற்கான பட்டியல் கட்சியின் பிரதிநிதிகளிடம் தரப்

    பட்டது.

    தொடர்ந்து ஆட்சியரகத்தில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், மத்திய போலீஸார் பாதுகாப்புடன் வாகனத்தில் ஏற்றப்பட்டு, அண்ணா அரசு கலைக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு, தனி அறையில் பாதுகாப்பாக வைக்கப்

    பட்டன.

    இந்த அறை சீல் வைக்கப்பட்டு, ஆயுதம் ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai