சுடச்சுட

  

  வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் ஒட்டும் பணி துவக்கம்

  By புதுச்சேரி,  |   Published on : 12th April 2014 04:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர்கள், சின்னங்கள் ஒட்டும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

  புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் 30 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். புதுச்சேரியில் 905 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளன. ஒரு இயந்திரத்தில் 15 பெயரும், ஒரு பட்டன் நோட்டாவுக்கும் ஒதுக்கப்படும். அதனால் வாக்குப்பதிவு மையத்தில் இரு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். மொத்தம் 1,810 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. அத்துடன் கூடுதலாக 10 சதவீதம் இயந்திரங்கள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன.

  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ரெட்டியார்பாளையத்தில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்திலிருந்து பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் இரும்புப் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தன. மாவட்டத் தேர்தல் அதிகாரி தீபக்குமார் முன்னிலையில் இரும்புப் பெட்டிகள் திறந்து, இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன.

  அத்துடன் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் ஒட்டும் பணியும் தொடங்கியுள்ளன. இது தொடர்பாக தேர்தல் துறை அதிகாரிகள் கூறியதாவது: 1,810 வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் ஒட்டப்படும். கூடுதலாக பத்து சதவீதம் இயந்திரத்திலும் இப்பணி நடைபெறும். மையத்தில் உள்ள இயந்திரம் பழுதானால், இருப்பில் உள்ள இயந்திரத்தைப் பயன்படுத்துவோம். சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் குலுக்கல் முறையில் பிரிக்கப்படும். பின்னர் பாதுகாப்பு பெட்டக அறையில் இயந்திரங்கள் வைக்கப்படும். மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்படும். வாக்குப்பதிவு மையங்களுக்குத் தேவையான 76 வித பொருள்களுடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தலுக்கு முந்தைய நாள் வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பப்படும் எனத் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai