சுடச்சுட

    

    விஜயகாந்த் படத்தை என்.ஆர். காங்கிரஸார் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்

    By காரைக்கால்,  |   Published on : 12th April 2014 04:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரைக்கால் மாவட்ட தேமுதிக செயலர் கணேஷ் மற்றும் நிர்வாகிகள் கலியபெருமாள், சக்திவேல் ஆகியோர் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான அ. முத்தம்மாவிடம் வெள்ளிக்கிழமை புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பது:

    புதுவையில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ஆர்.கே.ஆர். அனந்தராமனுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த நிலையில், என்.ஆர். காங்கிரஸ் கட்சியினர், தேமுதிக தலைவர் விஜயகாந்த் படத்தை போட்டு துண்டு பிரசுரம் அடித்து விநியோகிக்கின்றனர். இதை தடுக்க வேண்டும். இதுகுறித்து காரைக்காலில் உள்ள என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகளிடமும் தெரிவித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai