சுடச்சுட

  

  காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதர் கோயில் தேரோட்டம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

  By காரைக்கால்  |   Published on : 13th April 2014 08:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பிரம்மோத்சவத்தையொட்டி காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதர் கோயில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேர் இழுத்துச் சென்றனர்.

  அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாற்றை விளக்கி, ஆண்டுதோறும் ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர்  கோயிலில் மாங்கனித் திருவிழா நடைபெறுகிறது. இச்சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் பங்குனி மாதத்தில் பிரம்மோத்சவ விழா 12 நாள் நிகழ்ச்சியாக நடைபெறுகிறது.

  நிகழாண்டு இத்திருவிழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா செல்கிறது.

  முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீ நிலோத்பாலாம்பாள் சமேத ஸ்ரீ சந்திரசேகரர் வீற்றிருந்த தேரை காலை 7.30 மணியளவில் ஏராளான பக்தர்கள் சேர்ந்து இழுத்தனர். கோயில் நான்கு வீதிகளின் வழியே சென்று அம்மையார் கோயில் அருகே உள்ள தேர்நிலையை பகல் 1 மணியளவில் சென்றடைந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி (கோயில்கள்) ஏ.ராஜராஜன்வீராசாமி செய்திருந்தார்.

  தேர்தல் நடத்தி விதி அமலில் உள்ளதால் அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் என யாரும் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. 12- நாள் நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை தெப்போத்சவம் நடைபெறுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai