சுடச்சுட

    

    திருப்பதி தேவஸ்தான மையத்தில் ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்

    By புதுச்சேரி,  |   Published on : 13th April 2014 08:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரியில் உள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தான மையத்தில் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

    ஸ்ரீலட்சுமி விஷ்ணு சகஸ்ரநாம மண்டலியின் நிறுவனர் ஜனார்த்தன ராமானுஜ தாசன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    உலகம் முழுவதும் ஏக காலத்தில் 13-ம்  தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணி முதல் 5.30 மணிவரை ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்  நடைபெறவுள்ளது. இந்த பாராயணம் புதுவையில் எங்களது மண்டலி சார்பில் நேரு வீதியில் உள்ள  திருமலை திருப்பதி தேவஸ்தான தொடர்பு மையத்தில் நடத்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இதில் புதுவை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஆன்மிக பெருமக்கள்  பங்கு பெற்று இறை அருள் பெற வேண்டுமென்டும் என்றார் ஜனார்த்தனன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai