சுடச்சுட

  

  தேர்தல் விதிகளை மீறியதாக பாமக பிரமுகர் மீது வழக்கு

  By புதுச்சேரி,  |   Published on : 13th April 2014 08:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேர்தல் விதிகளை மீறி துண்டு பிரசுரங்கள் வழங்கியதாக பாமக பிரமுகர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

  புதுவை அருகே உள்ள நெட்டப்பாக்கம் பகுதியில் பாமக வேட்பாளர் அனந்தராமனை ஆதரித்து அக்கட்சியினர் வாக்கு சேகரித்தனர். நெட்டப்பாக்கம் நேரு நகர் பகுதியில், வீடு வீடாக சென்ற பாமக வினர் துண்டு பிரசுரங்களை விநியோகித்து வாக்கு சேகரித்தனர்.

  அப்போது, தேர்தல் பறக்கும் படை அதிகாரி பிரேமநாதன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். பாமக வினர் வழங்கிய துண்டு பிரசுரங்களில் அதனை அச்சிட்ட அச்சகம் தெரிவிக்கப்படாமல் இருந்தது. தேர்தல் விதிகளை மீறி துண்டு பிரசுரம் விநியோகித்ததாக அவர்கள் போலீஸில் புகார் கொடுத்தனர்.

  இதன் பேரில், நோட்டீஸ் அச்சிட்ட அச்சகத்தின் மீதும், துண்டு பிரசுரங்கள் வழங்கிய சொரப்பூரைச் சேர்ந்த சீனுவாசன் மீதும் நெட்டப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai