Enable Javscript for better performance
புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி மக்களிடையே வலுவாக பேசப்படுகிறது - Dinamani

சுடச்சுட

    

    புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி மக்களிடையே வலுவாக பேசப்படுகிறது

    By காரைக்கால்,  |   Published on : 13th April 2014 08:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி மக்களிடையே வலுவாக பேசப்படுவதாக பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் கூறினர்.

    புதுவை என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து காரைக்காலில் பாஜக புதுவை மாநில செயலர் எம்.அருள்முருகன் தலைமையில் அக்கட்சியினரும், என்.ஆர்.காங்கிரஸ் துணைத் தலைவர் கே.கோவிந்தராஜ் தலைமையில் அக்கட்சியினரும் கூட்டாக வீடு வீடாக சென்று பிரசாரம் செய்துவருகின்றனர்.

    காரைக்கால் வடக்கு, தெற்குத் தொகுதிக்குள்பட்ட சில இடங்களில் சனிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது பாஜக மாநில செயலர் எம்.அருள்முருகன் கூறியது : காரைக்கால் வடக்குத் தொகுதியில் உள்ள சுமார் 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களை நேரில் சந்தித்து முதல்கட்டமாக வாக்கு சேகரித்தோம். இப்போது தெற்குத் தொகுதியில் தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளோம். பெரும்பாலானோர் வீடுகளிலும் நரேந்திரமோடி பிரதமராக நாங்கள் வாக்களிக்க முடிவு செய்துவிட்டோம் என்றே கூறுகின்றனர். காரைக்காலில் நரேந்திரமோடி அலை வெகுவாக வீசுகிறது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றிக்கு பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் கடுமையாக பாடுபடுகிறார்கள். ராதாகிருஷ்ணன் வெற்றி உறுதியானதாகும் என்றார்.

    என்.ஆர்.காங்கிரஸ் துணைத் தலைவர் கே.கோவிந்தராஜ் கூறும்போது, புதுவை முதல்வர் என்.ரங்கசாமியி்ன் சேவையும், நாராயணசாமி புதுவை அரசுக்கு செய்த துரோகச் செயலும் மக்களால் பேசப்படுகிறது. பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி குறித்தும் மக்கள் அதிகமாக பேசுகின்றனர். மோடி, ரங்கசாமியின் கூட்டு வெற்றிக் கூட்டணியாகும். மத்தியில் பாஜக கூட்டணி அரசு நிச்சயமாக அமையும், புதுவை மாநிலம் சிறந்த வளர்ச்சியை அடையும் காலம் நெருங்குகிறது என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai