சுடச்சுட

  

  புதுவையில் மெகா லோக் அதாலத்: ரூ.10 கோடி அளவுக்கு தீர்வு

  By புதுச்சேரி,  |   Published on : 13th April 2014 08:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரியில் நடைபெற்ற மெகா லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) நிகழ்சசியில் ரூ.10 கோடி மதிப்பிலாந 6486 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

  புதுச்சேரி மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மெகா லோக் அதாலத் முகாம்

  ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. புதுச்சேரி மாவட்ட

  தலைமை நீதிபதி சிஎஸ்.முருகன் தலைமை தாங்கி முகாமைத் தொடங்கி வைத்தார்.

  சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் நீதிபதி பி. நல்லதம்பி வரவேற்றார்.

  மோட்டார் வாகன வழக்குகள், சிவில் வழக்குகள், குடும்ப நல நீதிமன்ற வழக்குகள்,

  காசோலை மோசடி வழக்குகள், சமரசத்தீர்வு காணக்கூடிய வழக்குகள் என பல்வேறு வழக்குகள் குறித்து விசாரிக்கப்பட்டன.

  மொத்தம் ரூ.10 கோடி மதிப்பிலாந 6486 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

  குடும்ப நல நீதிமன்ற நீதிபதி பஷி்ர் அகமது, கூடுதல் மாவட்ட நீதிபதி மேரி அன்சுலாம், குற்றவியல் தலைமை நடுவர் தனயேந்திரன், தனி அலுவலர் மலர்விழி, நீதிபதிகள் லீலாவதி, பக்கிரிசாமி, ரமேஷ், ராஜேந்திரன், பிரகாஷ், எழில்வேலன், விஜயகுமார் உள்ளிட்டோர் முகாமை நடத்தினர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai