சுடச்சுட

  

  புதுவை பல்கலைக் கழக துணைவேந்தர் வீடு முற்றுகை: இந்திய மாணவர் சங்கம் எச்சரிக்கை

  By புதுச்சேரி,  |   Published on : 13th April 2014 08:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாணவர் விரோதப் போக்கு தொடர்ந்தால் துணைவேந்தர் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என இந்திய மாணவர் சங்கம் எச்சரித்துள்ளது.

  இதுதொடர்பாக அதன் பிரதேச நிர்வாகிகள் அருண்குமார், அ.ஆனந்த் வெளியிட்ட அறிக்கை:

  புதுச்சேரி பல்கலைகழக மாணவிகள் விடுதியில் உலாவரும் மர்ம நபரை கண்டுபிடிக்க திறனற்ற பல்கலைகழக நிர்வாகம், தனது செயலற்ற தன்மையை மூடி மறைக்க அப்பாவி மாணவன் மீது பழி சுமத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர்.  பல்கலைகழக தமிழ்த் துறை முதலாமாண்டு மாணவரை பிடித்து இருட்டு அறையில் வைத்து  இரண்டு நாட்கள் விசாரணை என்ற பெயரில் அடித்து சித்ரவதை செய்துள்ளனர்.

  செய்யாத குற்றத்தை செய்ததாக ஏற்க்க சொல்லி கையெழுத்து இடுமாறு கட்டாயபடுத்தி அடித்துள்ளனர்.

  மாணவர் மீதான மனித உரிமை மீறலுக்கு முழு காரணமாய் இருந்து செயல்பட்டவர் பல்கலையின் அகாடெமிக் கல்லூரியின் இயக்குனராக பொறுப்பு வகிக்கும் பேராசிரியர் ஹரிஹரன் என்பவர். ஐவரும் மேலாண்மை துறை பேராசிரியர் பூஷன் மற்றும் சில செக்யூரிட்டி அதிகாரிகள் சேர்ந்து மாணவனை இரண்டு நாட்கள் இருட்டு அறையில் அடித்துள்ளனர்.

  தமிழ்துறை மாணவனுக்கு நடந்த மனித உரிமை மீறலை கண்டித்து பல்கலை மாணவர்கள்  தொடர் போராட்டத்தில் குதித்துள்ளனர். இச்சம்பவமானது புதுச்சேரி பல்கலை நிர்வாகத்தின் மாணவர் விரோத போக்கிற்கு மற்றுமொரு சான்றாய் உள்ளது. தற்போது தவறு செய்யாத மாணவனை தாக்கியதோடு, குற்றம் இழைத்தவரை காப்பாற்றும் வேளையில் இறங்கியுள்ளது.

  தற்போது குற்றம்சாட்டப்பட்டுள்ள ஹரிஹரன் மீது ஏற்கனவே தனியார் கல்லூரிகளுக்கு உரிமம் வழங்குவதில் ஊழல் முறைகேடு செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் உள்ளது. அவரை காப்பாற்ற முயற்சிப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. பல்கலைகழக துணைவேந்தர் உடனடியாக தலையிட்டு குற்றமிழைத்த ஹரிஹரன் உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பல்கலைகழகம் மற்றும் புதுவையில் உள்ள அனைத்து மாணவர்களை திரட்டி இந்திய மாணவர் சங்கம் வரும் செவ்வாய்க்கிழமை துணை வேந்தர் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai