சுடச்சுட

    

    புதுவை பல்கலையில் போராட்டம்: 200 மாணவர்கள் மீது வழக்கு

    By புதுச்சேரி,  |   Published on : 13th April 2014 08:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்தி பேராசிரியர் வீட்டை சேதப்படுத்தியதாக 200 மாணவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

    புதுவை பல்கலைக்கழக தமிழ்த்துறை மாணவர் ராதாகிருஷ்ணன் மீது, மகளிர் விடுதிக்குள் புகுந்து திருடியதாக புகார் தெரிவித்து, பேராசிரியர்கள் சிலர் அவரைத் தாக்கியதாகத் தெரிகிறது. மாணவரை தனி அறையில் வைத்து கொடுமைப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த இரண்டு நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    வெள்ளிக்கிழமை மாலை, மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு, மாணவரைத் தாக்கிய பேராசிரியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.

    நிர்வாகத்தரப்பில் கண்டுகொள்ளாமல் போனதால், ஆத்திரமடைந்த மாணவர்கள் அருகே இருந்த பேராசிரியர் குடியிருப்பு பகுதிக்குச் சென்று, பேராசிரியர் ஒருவரின் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கிருந்த காரினை உடைத்து சேதப்படுத்திவிட்டுச் சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து பேராசிரியர் ஸ்ரீதரன், பல்கலைக்கழக பாதுகாவலர் நாகேஷ் ஆகியோர் காலாப்பட்டு போலீஸில் புகார் கொடுத்தனர். இதன் பேரில், பல்கலைக்கழக வளாகத்திலும், பேராசிரியர் குடியிருப்புகளிலும் திரண்டு போராட்டம் நடத்தியதோடு, ரூ.50 ஆயிரம் மதிப்பலான பொருள்களை சேதப்படுத்தியதாக, பல்கலைக்கழக மாணவர்கள் 200 பேர் மீது காலாப்பட்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai