சுடச்சுட

  

  முதல்வர் ரங்கசாமி நிறுத்திய திட்டங்களை செயல்படுத்தியது காங்கிரஸ் தான்: எதிர்க்கட்சித் தலைவர் வி. வைத்திலிங்கம் பேச்சு

  By புதுச்சேரி,  |   Published on : 13th April 2014 08:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  முதல்வர் ரங்கசாமி நிறுத்திய திட்டங்களை இரண்டரை ஆண்டுகளில் செயல்படுத்தியது காங்கிரஸ் அரசு தான் என எதிர்க்கட்சித் தலைவர் வி.வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

  புதுவை உருளையன்பேட்டை தொகுதியில் திறந்த ஜீப்பில் எதிர்கட்சித்தலைவர் வைத்தி லிங்கம் சனிக்கிழமை வீதி, வீதியாக பிரசாரம் செய்தார். காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து அவர் பேசியது:

  முதல்வ ரங்கசாமி காங்கிரஸ் ஆட்சி  செய்த இரண்டரை ஆண்டுகளில் என்ன திட்டங்கள் செய்தது? என கேள்வி எழுப்பி யுள்ளார். சிலவற்றை அவருக்கு ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் தான் மகளிர்  மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை திறக்கப்பட்டது.

  அந்த திட்டத்திற்கு ரூ.35 கோடி  செலவாகும் என திட்ட மதீப்பீடு போடப்பட்டது. ஆனால் ரூ.30 கோடிக்குள் கட்டி முடித் தோம். அரசு மருத்துவக்கல்லுõரி கட்ட ரூ.800 கோடி என ரங்கசாமி திட்டம் தீட்டினார். இதனால்  கட்டப்படாமலேயே இருந்தது. அதை ரூ.110 கோடியில் கட்டி முடித்து திறந்தோம். இந்த 2  திட்டங்களையும் சோனியா திறந்து வைத்தபோது ரங்கசாமியும் விழாவில் பங்கேற்றாரே?  அதை மறந்துவிட்டாரா?

  மாணவர் சிறப்பு பேருந்து

  இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாதபடி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கென ஒரு  ரூபாய் சிறப்பு பேருந்து இயக்கப்பட்டது காங்கிரஸ் ஆட்சியில்தான். தற்போது அந்த  பஸ்களில் அவரது படம் ஒளிர்கிறதே? அந்த திட்டத்தை யார் கொண்டுவந்தது? கா ங்கிரஸ்தான்.

  காலாப்பட்டில் 1431 மீனவர் குடியிருப்புகளை கட்டித் தந்தோம். அங்கு தேவையான சாலை, குடிநீர், மின்சார வசதியை ஏற்படுத்தித்தந்தோம். இது அவருக்கு  ஞாபகம் இல்லையா? அரியாங்குப்பம் பாலம் கட்டும் பணி பாதி கட்டப்பட்டு காட்சிப் பொருளாகவே இருந்தது. அந்த பாலத்தை காங்கிரஸ் ஆட்சிதான் கட்டிமுடித்தது. ரங்கசாமி  வந்து அதை திறந்து வைத்தார். அது மறந்துவிட்டதா?

  காரைக்காலில் அம்மையார் குளம் சீரமைக்கப்பட்டது, அரசலாற்று பாலம் கட்டினோம்,  பைபாஸ் சாலை அமைத்தோம். காங்கிரஸ் ஆட்சியில் செய்த இந்த பணிகள் அவருக்கு  தெரியாதுதான். காரைக்காலுக்கு அவர் சென்றிருந்தால்தானே இந்த பணிகள் நிறைவேற்ற ப்பட்டுள்ளது என தெரியும்?

  புதுவை முழுவதும் பள்ளிகளில் கூடுதலாக 254 வகுப் பறைகள் கட்டினோம், பாதாள சாக்கடை பணிகளை முழுமையாக செய்துமுடித்தோம்.  இதெல்லாம் சாமியார் கொடுத்தது என ரங்கசாமி நினைக்கிறாரா? காங்கிரஸ் ஆட்சிதான்  செய்து கொடுத்தது. இந்த பணிகளையும் அவர் மறந்துவிட்டார்.

  அவருக்கு ஆட்சியை  அளித்த மக்களையும் மறந்துவிட்டார், ஒரு அரசை எப்படி நடத்த வேண்டும் என்பதையும்  அவர் மறந்துவிட்டார். அவரை மக்கள் மறந்துவிட்டு காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றார் வைத்திலிங்கம். வட்டார தலைவர்  ரகுமான், காங்கிரஸ் மாநில செயலாளர் சாம்ராஜ், நிர்வாகிகள் கோவிந்தராஜ், விநாயகம்  உட்பட பலர் பிரசாரத்தில் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai