சுடச்சுட

  

  புதுவைக்கு மத்திய அரசு செய்த உதவிகள் தொடர்பாக உண்மைகளை மறைக்கிறார் முதல்வர் ரங்கசாமி என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

  புதுச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை பாரதிதாசன் திடலில் பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். இதில் சிதம்பரம்

  பேசியது:

  பாஜக ஆட்சிக்கு வந்தால் நாட்டின் மதச்சார்பின்மை, இட ஒதுக்கீட்டு கொள்கைகளுக்கு பேராபத்து ஏற்படும். ஊரக வேலை உறுதித்த திட்டம் நிறுத்தப்படும். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களின் நலன் பாதிக்கப்படும்.

  காங்கிரஸ் கட்சியால் ஆளாக்கப்பட்டவர் முதல்வர் ரங்கசாமி. அவர் வெளியே சென்று தனிக்கட்சி ஆரம்பித்ததுகூட வருத்தம் தரவில்லை. ஆனால் மதவாத பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதுதான் வேதனை தருகிறது.

  புதுச்சேரிக்கு மத்திய அரசு எந்த நிதியுதவியும் செய்யவில்லை என உண்மைகளை மறைத்துப் பேசுகிறார் முதல்வர் ரங்கசாமி. புதுவைக்கு கடந்த 5 ஆண்டுகளில் திட்டச் செலவு என்ற அடிப்படையில் ரூ.1,817 கோடி, திட்டமில்லாத செலவு என்ற அடிப்படையில் ரூ.3,736 கோடி என மொத்தம் ரூ. 5,052 கோடியை மத்திய அரசு தந்துள்ளது.

  காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி செய்த பணிகளை புதுவை மக்கள் மீண்டும் அறிவார்கள். மத்திய அரசில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

  இந்தியாவின் மதச்சார்பின்மை கொள்கை, இட ஒதுக்கீட்டுக் கொள்கை, மக்கள் நலத்திட்டங்கள் தொடர காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்றார் சிதம்பரம்.

  முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, தேனி ஜெயக்குமார், காங்கிரஸ் நிர்வாகிகள்

  சிவக்கொழுந்து, இளையராஜா, தேவதாஸ் உள்பட பலர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai