Enable Javscript for better performance
காலாப்பட்டு கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்- Dinamani

சுடச்சுட

    

    காலாப்பட்டு கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்

    By புதுச்சேரி,  |   Published on : 14th April 2014 04:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, காலாப்பட்டு முருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக் கடனை செலுத்தினர்.

    காலாப்பட்டு பாலமுருகன் கோயிலில் கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர விழா தொடங்கியது. நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, வீதியுலா நடைபெற்றது.

    முக்கிய விழாவான பங்குனி உத்திர திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காலை 7 மணிக்கு 101 காவடி ஏந்தி பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றனர். கிரேன், நெல் அறுவடை இயந்திரம், பொக்லைன் உள்பட பல்வேறு வாகனங்களில் பக்தர்கள் அலகு குத்தி வந்து நேர்த்திக் கடனை செலுத்தினர்.

    கோயிலில் தொடங்கிய ஊர்வலம், கிழக்கு கடற்கரைச் சாலை, பிள்ளையார் கோயில் வீதி, பங்களா தெரு வழியாக கோயிலை அடைந்தது. பக்தர்களுக்கு நீர் மோர், அன்னதானம் வழங்கப்பட்டன.

    காலாப்பட்டு இன்ஸ்பெக்டர் வரதராஜ், எஸ்ஐ சிவக்குமார் தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். திங்கள்கிழமை தெப்போத்ஸவமும், 15-ம் தேதி ஊஞ்சல் உத்ஸவமும் நடக்கிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai