சுடச்சுட

  

  புதுவையில் கிறிஸ்தவர்கள் சார்பில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நடைபெற்றது.

  கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் கடந்த மாதம் தொடங்கியது. அதன் பின் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை தேவாலயங்களில் சிலுவைப் பாதை வழிபாடுகள் நடந்து வருகின்றன.

  தவக்காலத்தின் முக்கிய நிகழ்வான புனித வார சடங்குகள் குருத்தோலை ஞாயிறுடன் தொடங்கியது. இயேசு கிறிஸ்து சிலுவை பாடுகளை ஏற்கும் முன்பு, ஜெருசலம் சென்ற போது அங்கு கூடியிருந்த மக்கள் கையில் குருத்தோலை ஏந்தியபடி அவரை வரவேற்ற நிகழ்வை நினைவு கூரும் வகையில் குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது.

  புதுவையில் உள்ள ஜென்மராக்கினி பேராலயம், தூய இருதய ஆண்டவர், பசிலிக்கா, நெல்லித்தோப்பு விண்ணேற்பு அன்னை, அரியாங்குப்பம் ஆரோக்கிய அன்னை,வில்லியனூர் லூர்தன்னை தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தியபடி ஓசன்னா கீதம் பாடல் பாடி ஊர்வலமாகச் சென்றனர். பின்னர் திருப்பலி பிரசங்க நிகழ்ச்சிகள் நடந்தன. வரும் 18-ம் தேதி பெரிய வெள்ளி, நள்ளிரவு ஈஸ்டர் திருவிழிப்பு சடங்கு நடைபெறுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai