சுடச்சுட

    

    புதுச்சேரி மக்களுக்கு மத்திய அமைச்சர் வி.நாராயணசாமி தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    அவர் வெளியிட்ட செய்தி:

    இனிய சித்திரைத் திருநாளில் வசந்தம் வருவதால் பண்டைய காலம் தொட்டு அனைவரும் புத்தாண்டைக் கொண்டாடி வருகின்றனர்.

    இத்திருநாள் புதுவை மக்களுக்கு அனைத்து நலன்களையும் சேர்க்க வேண்டும். இதைத் தொடர்ந்து சட்ட மேதை ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுக்காக தன்னையே அர்ப்பணித்த அம்பேத்கர் பிறந்த நாளையும் கொண்டாடுகிறோம். அரசியல் சட்டத்தை உருவாக்கிய அவரையும் நினைவு கூருவோம்.

    புதுவை மாநிலத்தில் தமிழ்ப் பண்பாட்டை வளர்க்கவும், தமிழர்களுக்காக குரல் தரவும் உறுதி எடுத்துக் கொள்வோம்.

    சித்திரை திருநாளில் புதுவை மாநிலத்தில் உள்ள விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், மகளிர், அரசு ஊழியர்கள், தாழ்த்தப்பட்ட, பிற்பட்ட மக்கள் வாழ்வு வளம் பெற பாடுபடுவோம். அனைவரும் எல்லா வளமும்,நலமும் பெற்று ஒற்றுமையுடன் வாழ வாழ்த்துகிறேன் என்றார் நாராயணசாமி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai