Enable Javscript for better performance
பாரபட்சமின்றி பணிபுரிய போலீஸாருக்கு டிஜிபி அறிவுரை- Dinamani

சுடச்சுட

    

    பாரபட்சமின்றி பணிபுரிய போலீஸாருக்கு டிஜிபி அறிவுரை

    By புதுச்சேரி,  |   Published on : 14th April 2014 04:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வரும் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவின் போது கட்சிப் பாகுபாடின்றி போலீஸார் பணிபுரிய வேண்டும் என டிஜிபி ஆர்.காமராஜ் அறிவுறுத்தினார்.

    புதுவை தொகுதியில் வரும் 24-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. அப்போது போலீஸார் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த சிறப்பு ஆலோசனைக் கூட்டம் கோரிமேடு அன்னை தெரசா சுகாதார பட்டமேற்படிப்பு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு தலைமை வகித்து டிஜிபி காமராஜ் பேசியதாவது: தேர்தல் ஆணைய விதிமுறைகளை அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். வாக்குப் பதிவின்போது கட்சி பாகுபாடின்றி அனைவரும் செயல்பட வேண்டும். மக்களுக்கும் நமது பணிகள் குறித்து தெரிய வேண்டும்.

    வரப்போகும் பிரச்னைகளை முன்கூட்டியே அறிந்து எதனால் வந்தது என்பதை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு போலீஸ் உயரதிகாரிகள் உங்களுக்கு துணை நிற்பர்.

    அனைத்துப் போலீஸாரும் தங்கள் பணிகளை நேர்மையான முறையில் ஆற்ற வேண்டும்.

    3 கம்பெனி துணை ராணுவம்: வரும் 19-ம் தேதி மேலும் 3 கம்பெனி மத்திய ஆயுதப்படை போலீஸார் புதுவைக்கு வருகின்றனர். அவர்கள் உடனடியாக தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்றார் காமராஜ்.

    இக் கூட்டத்துக்கு எஸ்எஸ்பி ஓம்வீர் சிங் முன்னிலை வகித்தார்.

    தேர்தல் பணியின்போது போலீஸார் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து எஸ்பி ரவிக்குமார் விளக்கினார்.

    வாக்குச் சாவடி பணியில் உள்ள போலீஸார் கட்டாயம் லத்தி வைத்திருக்க வேண்டும். வாக்காளர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்க வேண்டும். தேர்தல் துறை தரும் உணவு, குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிரச்னைகளை அமைதியான முறையில் கையாள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டன.

    இந்நிகழ்ச்சியில் எஸ்பிக்கள் பிரவீண்குமார், பைரவசாமி, தெய்வசிகாமணி, குணசேகரன், நந்தகோபால், ஆறுமுகம், குப்புசாமி, இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐக்கள், போலீஸார் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai