சுடச்சுட

    

    புதிய திட்டங்களை கொண்டு வந்தது என்.ஆர். காங்கிரஸ்: முதல்வர் ரங்கசாமி

    By புதுச்சேரி  |   Published on : 14th April 2014 04:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை மாநிலத்துக்கு புதிய திட்டங்களை கொண்டு வந்தது என்.ஆர். காங்கிரஸ் அரசு தான் என முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.

    புதுச்சேரி ராஜ்பவன் தொகுதியில் சனிக்கிழமை இரவு வேட்பாளர் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து அவர் பேசியதாவது: கடந்த 23 ஆண்டுகளாக புதுவையில் எம்பி பதவி வகித்த நாராயணசாமி என்ன செய்தார் என மக்களுக்கு நன்றாக தெரியும்.

    நான் கூறிய வாக்குறுதிகள் அனைத்தையும் 2 ஆண்டுகளில் நிறைவேற்றி விடுவேன். மீனவ முதியோர் உதவித்தொகை 520 பேருக்குத் தர வேண்டி உள்ளது. தேர்தலுக்கு பின் அதைத் தந்து விடுவோம்.

    குழந்தைகள் மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி, அரியாங்குப்பம் பாலம் போன்றவற்றை காங்கிரஸ் அரசு திறந்ததாக வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

    இத்திட்டங்கள் அனைத்தும் நான் முன்பு முதல்வராக இருந்த போது கொண்டு வந்தது. காங்கிரஸ் ஆட்சியில் எந்த புதிய திட்டமும் நிறைவேற்றப்படவில்லை.

    கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எங்களுக்கு ஆதரவு தந்தது போலவே வரும் தேர்தலிலும் வேட்பாளர் ராதாகிருஷ்ணனுக்கும் ஆதரவளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார் ரங்கசாமி. தொகுதி பொறுப்பாளர் அனிபால் நேரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai