சுடச்சுட

  

  புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் தற்போது மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 9,01,357 என தேர்தல் துறை தெரிவித்துள்ளது. ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் கூடுதலாக உள்ளனர்.

  புதுச்சேரி மக்களவைத் தொகுதி வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. பின்னர் துணை வாக்காளர் பட்டியல் கடந்த 6.1.2014-லும், 16.3.14-லும் வெளியிடப்பட்டது.

  தொடர்ந்து வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய இறுதி நாளான ஏப்ரல் 5-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் தேர்தல் துறை சார்பில் கடந்த 6-ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல்படி புதுவை தொகுதியில் 4,32,048 ஆண் வாக்காளர்களும், 4,69,289, பெண் வாக்காளர்கள் இதர வாக்காளர்கள் 20 பேர் என மொத்தம் 9,01,357 பேர் உள்ளனர்.

  8.85 லட்சம் வாக்காளர்களிலிருந்து தற்போது 9.01 லட்சம் வாக்காளர்களாக அதிகரித்துள்ளது.

  கடந்த 6.1.14-ல் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 4,24,958 ஆண் வாக்காளர்கள், 4,60,488 பெண் வாக்காளர்கள் என 8,85,458 வாக்காளர் இருந்தனர்.

  தற்போது 6.4.14-ல் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி மொத்தம் 9,01,357 வாக்காளர்கள் உள்ளனர். அரியாங்குப்பம் பேரவைத் தொகுதியில் மொத்தம் 34,039 வாக்காளர்களுடன் முதலிடத்தை பெற்றுள்ளது.

  ஏனாம் தொகுதியில் முன்பு 33,506 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது 34,032 வாக்காளர்களாக அதிகரித்துள்ளனர். குறைந்தபட்சமாக உருளையன்பேட்டை தொகுதியில் 23,770 வாக்காளர்களே உள்ளனர்.

  புதுவை பிராந்தியத்தில் மொத்தம் உள்ள 23 பேரவைத் தொகுதிகளில் 6,86,358 பேரும், காரைக்கால் பிராந்தியத்தில் 2,14,999 வாக்காளர்களும், மாஹே பிராந்தியத்தில் 30,060 வாக்காளர்களும் உள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai