சுடச்சுட

  

  மத்திய திட்டக்குழு வழங்கிய நிதியை குறைத்துப் பெற்றவர் ரங்கசாமி

  By புதுச்சேரி,  |   Published on : 14th April 2014 04:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவைக்கு மத்திய திட்டக் குழு வழங்கிய நிதியில் ரூ.1000 கோடியை குறைத்துப் பெற்றவர் ரங்கசாமி என காங்கிரஸ் வேட்பாளர் வி.நாராயணசாமி புகார் கூறியுள்ளார்.

  புதுவை எம்பி தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், மத்திய அமைச்சருமான நாராயணசாமி லாஸ்பேட்டை தொகுதியில் ஆலங்குப்பம், சஞ்சீவி நகர்ப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்து பேசிய

  தாவது:

  புதுவை மாநிலத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடி திட்டப்பணிகளை கொண்டு வந்துள்ளேன். இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் 17 ரயில் சேவைகளை கொண்டு வந்துள்ளேன். 4 இடங்களில் மேம்பாலம் கட்டுவதற்காக மத்திய அரசின் முழு நிதியையும் பெற்று தந்துள்ளேன்.

  புதுவை பகுதி மட்டுமின்றி காரைக்கால், ஏனாம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளேன்.

  முதல்வர் ரங்கசாமி அனைத்து பட்ஜெட்டிலும் புதுவையில் மேம்பாலங்கள் கட்டப்படும் எனக் கூறினார். ஆனால் அதற்கான அடிப்படை பணிகளைக் கூட செய்யவில்லை.

  குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ரூ.350 கோடி மத்திய அரசு வழங்கியுள்ளது. நான்கு வழிச் சாலைக்காக ரூ.250 கோடியை மத்திய அரசிடம் பெற்றுத் தந்துள்ளேன். சுற்றுலாவிற்காக ரூ.125 கோடி நிதி பெற்று தந்துள்ளேன். இப்படி எண்ணற்ற பணிகளுக்கு நிதிகளை வாங்கி தந்துள்ளேன்.

  ஆனால் ரங்கசாமியே மத்திய அரசு அளித்த ரூ.3 ஆயிரம் கோடியில், ரூ.2 ஆயிரம் கோடி போதும் என நிதியை குறைத்து வாங்கினார். அவர் நாராயணசாமி நிதியை தடுத்து விட்டார் எனக் கூறுகிறார்.

  26 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்குவதை நிறுத்திவிட்டு வெறும் ரூ.100 மட்டும் உயர்த்தி வழங்கி முதியோரையும் ரங்கசாமி ஏமாற்றியுள்ளார்.

  இத்தேர்தலில் மக்கள் அவருக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றார் நாராயணசாமி.

  இப் பிரசாரத்தின் போது முன்னாள் அமைச்சர் ஷாஜகான், காங்கிரஸ் நிர்வாகிகள் ஜோசப், சுகுமாரன் ஆகியோர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai