சுடச்சுட

    

    மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி வேட்பாளர் பிரசாரம்

    By புதுச்சேரி,  |   Published on : 14th April 2014 04:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை எம்பி தொகுதி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கோ.பழனி ஞாயிற்றுக்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

    ஜீவா நகர், பிருந்தாவனம், சித்தன்குடி, முதலியார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவர் வாக்குச் சேகரித்தார். அவரை ஆதரித்து மாநிலச் செயலர் சோ.பாலசுப்பிரமணியன் பேசியது:

    காங்கிரஸ் கட்சி தொழிலதிபர்களின் நலனுக்காக செயல்படுகிறது. தொழிலாளர் விரோதப் போக்கை கடைபிடித்து வருகிறது. பாஜக வகுப்பு வாதத்தை முன்னிறுத்தி பிரசாரம் செய்கிறது.

    புதுவையில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் அரசு செயலற்றதாக உள்ளது. விவசாயத்தை பாதுகாக்கவும், தொழிலாளர்களின் நிலையை மேம்படுத்தவும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பழனியை ஆதரிக்க வேண்டும் என்றார் பாலசுப்பிரமணியன்.

    இந்நிகழ்ச்சியின் போது நிர்வாகிகள் பி.சங்கரன் சோ.மோதிலால், பி.முருகன், அ.ராஜாராம், லெனின் உள்பட பலர் உடன் சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai