சுடச்சுட

  

  மின்சாரம், குடிநீர் கட்டணம் பலமடங்கு உயர்வு

  By புதுச்சேரி  |   Published on : 14th April 2014 04:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததை விட தற்போதைய என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் மின்சாரம், குடிநீர் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது என எதிர்க் கட்சித் தலைவர் வி.வைத்திலிங்கம் புகார் கூறியுள்ளார்.

  புதுவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், மத்திய அமைச்சருமான நாராயணசாமிக்கு வாக்குச் சேகரித்து திருபுவனை தொகுதியில் எதிர்கட்சித் தலைவர் வைத்திலிங்கம் ஞாயிற்றுக்கிழமை பேசியதாவது:

  புதுவையில் முதல்வர் ரங்கசாமியின் இயலாமையால் எந்த திட்டத்தையும் செய்யவில்லை. புதுவை முழுவதும் குப்பை குவியலாக உள்ளது. வீதிகள் தோறும் நாய் தொல்லை அதிகரித்துள்ளது.

  சுதேசி, பாரதி, ஏஎஃப்டி மில்களில் பணிபுரியும் ஊழியர்கள், காங்கிரஸ் ஆட்சியின்போது ரூ.14 ஆயிரம் சம்பளம் வாங்கினர்.

  தற்போது ரூ.4 ஆயிரம் கூட ரங்கசாமி அரசால் வழங்க முடியவில்லை. கடந்த 15 மாதங்களாக சம்பளம் கிடைக்காமல், ஊழியர்கள் அவதியடைந்து வருகின்றனர். 4 ஆயிரம் பேரை வேலையில் இருந்து ரங்கசாமி நீக்கினார். சிலரை மட்டும் தாற்காலிகமாகப் பணியில் சேர்த்துவிட்டு நிரந்தர வேலையை வழங்காமல் நாடகமாடி வருகிறார்.

  காங்கிரஸ் ஆட்சியில் ரூ.100-ஆக இருந்த மின் கட்டணம் தற்போது ரூ.400-ஆகவும், குடிநீர் கட்டணம் ரூ.100-லிருந்து ரூ.200-ஆகவும் உயர்ந்துள்ளது. மாணவர்களுக்கு மதிய உணவு, சீருடை எதுவும் கொடுக்கவில்லை.

  காங்கிரஸ் ஆட்சியில் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை, மாணவர் சிறப்புப் பேருந்து, ராஜீவ் காந்தி குழந்தைகள் மருத்துமனை, அரசு மருத்துவக் கல்லூரி போன்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால் ரங்கசாமி காங்கிரஸ் கட்சி என்ன செய்தது என கேட்கிறார்.

  புதுச்சேரியில் சிறுபான்மையினருக்கு ரங்கசாமி கடன் வழங்கியது இல்லை. எனவே மக்கள் ரங்கசாமிக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றார் வைத்திலிங்கம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai