சுடச்சுட

    

    வேட்பாளர்கள் செலவுக் கணக்கு: தேர்தல் பார்வையாளர் ஆய்வு

    By புதுச்சேரி,  |   Published on : 14th April 2014 04:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள் தேர்தல் செலவுக் கணக்கு தொடர்பாக பதிவேடுகளை தேர்தல் செலவினப் பார்வையாளர் கீழ்காணும் வகையில் ஆய்வு செய்ய உள்ளார்.

    இது தொடர்பாக புதுவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சுபா.தீபக்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணி முதல் மாலை 4.30 மணி வரையில் ஆய்வு செய்தார்.

    வரும் 16-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரையும், 17-ம் தேதி பிற்பகல் 12 மணி முதல் மாலை 4.30 மணி வரையும், 22-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரையும், 23-ம் தேதி பிற்பகல் 12 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் தேர்தல் செலவு கணக்கு பதிவேடுகளை செலவின பார்வையாளர் ஆய்வு செய்வார்.

    எனவே புதுவை எம்பி தொகுதியில் போட்யிடும் வேட்பாளர்கள் தங்களின் தேர்தல் செலவுக் கணக்கு பதிவேடுகளை வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் தேர்தல் செலவின பார்வையாளரிடம் "தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகம், புதுவை எம்பி தொகுதி, வருவாய்த் துறை வளாகம், சாரம், புதுச்சேரி' என்ற முகவரியில் தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai