சுடச்சுட

  

  அதிக தொகைக்கு பட்ஜெட் போட்டு மக்களை ஏமாற்ற விரும்பவில்லை:முதல்வர் ரங்கசாமி

  By புதுச்சேரி  |   Published on : 15th April 2014 03:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவையில் அதிக தொகைக்கு பட்ஜெட் போட்டு மக்களை ஏமாற்ற விரும்பவில்லை என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

  புதுவை தொகுதி என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணனை ஆதரித்து அவர் மணவெளி, அரியாங்குப்பம் பகுதிகளில் வாக்கு சேகரித்த போது பேசியதாவது:

  கடந்த பேரவை தேர்தலில் மணவெளி தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கினோம்.

  வரும் தேர்தலில் நமது ஜக்கு சின்னத்தை மக்கள் மனதில் பதியச் செய்ய வேண்டும்.

  புதுச்சேரி மாநிலத்தில் ஓரே ஒரு மக்களவை உறுப்பினரைத் தான் தேர்வு செய்ய முடியும்.

  தகுதி வாய்ந்த நல்லவரை நீங்கள் தேர்வு செய்யவேண்டும். கடந்த 23 ஆண்டுகளாக

  எம்.பியாக இருந்த நாராயணசாமியால் எந்த பலனும் ஏற்படவில்லை. தேவையான

  நிதியை பெற்றுத்தரவில்லை. மத்தியில் காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருக்கும்போதே

  எதுவும் செய்யவில்லை.

  மத்தியில் பா.ஜ.க. கூட்டணி அரசு அமையப்போகிறது. அப்போது நாராயணசாமி

  வெற்றி பெற்றால் ஒன்றும் நடக்காது. எநவே தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும்.

  மத்திய திட்டக் குழுவிடம் நிதியை குறைத்து நான் வாங்கியதாக நாராயணசாமி கூறி வருகிறார். அதிகமாக நிதி வாங்கி, அதிக தொகைக்கு பட்ஜெட் போட்டு மக்களை ஏமாற்ற விரும்பவில்லை. மக்கள் மீது நிதிச்சுமையை ஏற்ற வில்லை.

  முதியோர் ஓய்வூதிம் பெறுவதில் சிரமம் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறி

  உள்ளார். வங்கி மூலம் முதியோர் ஓய்வூதியம் பெறும் திட்டத்துக்கு ஆதரவு

  தெரிவித்தவர் வைத்திலிங்கம்.

  இத்திட்டம் சிறப்பானது என காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பேசி உள்ளனர். தற்போது

  குறை சொல்ல வேண்டும் என்பதற்காக மாற்றிச் சொல்கின்றனர் என்றார் ரங்கசாமி.

  மணவெளி தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் சுரேஷ், குமரகுரு உள்பட பலர் உடனிருந்தனர்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai