சுடச்சுட

  

  காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரசாரம் நாம் தமிழர் கட்சி செயலர் மீது வழக்கு

  By புதுச்சேரி  |   Published on : 15th April 2014 03:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவையில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரசாரம் செய்ததாக நாம் தமிழர் கட்சியின் மாநில செயலாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

  புதுவையில் நாம் தமிழர் கட்சியினர், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரசாரம் செய்து வருகின்றனர். ஈழத்தமிழர்கள் பிரச்னை, தமிழக மீனவர்கள் பிரச்னை, நதீநீர் பிரச்னைகளில் தமிழர்களுக்கு துரோகம் இழைத்து வந்த காங்கிரஸ் கட்சிக்கு மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கக் கூடாதென்பதை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.

  இந்த வகையில், கடந்த வெள்ளிக்கிழமை புதுவை மேட்டுப்பாளையம் அருகே உள்ள குருமாம்பேட் பஸ் நிறுத்தப் பகுதியில்,  டாடா ஏஸ் வாகனத்தில், நாம் தமிழர் கட்சியினர் ஒலிபெருக்கி வைத்து பிரசாரம் செய்துள்ளனர்.

  அதில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக விமர்சித்து பிரசாரம் செய்ததாகத் தெரிகிறது. இது குறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி மணிகண்டன், போலீஸில் ஞாயிற்றுக்கிழமை புகார் கொடுத்தார். இதன் பேரில், மேட்டுப்பாளயம் போலீஸார், நாம் தமிழர் கட்சி மாநில செயலாளர் வேல்சாமி மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்து விசாரித்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai