சுடச்சுட

  

  சிறப்புக்கூறு திட்ட நிதியை வேறு பணிகளுக்கு செலவழித்தவர் ரங்கசாமி :திமுக புகார்

  By புதுச்சேரி  |   Published on : 15th April 2014 03:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சிறப்புக்கூறு திட்ட நிதியை வேறு பணிகளுக்கு செலவழித்தவர் முதல்வர் ரங்கசாமி என திமுக வேட்பாளர் நாஜிம் புகார் கூறி உள்ளார்.

  புதுச்சேரி ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட கிருமாம்பாக்கம், பிள்ளையார்குப்பம், பனித்திட்டு, நரம்பை, ஈச்சங்காடு, வம்பாபேட், கந்தன்பேட், ஆதிங்கப்பட்டு, சேலியமேடு, அரங்கனூர், கரிக்கலாம்பாக்கம், கோரிக்காடு, ஏம்பலம் பகுதிகளில் திங்கள்கிழமை வாக்கு சேகரித்த நாஜிம் பேசியதாவது:

  காங்கிரஸ் கட்சியும், என்.ஆர். காங்கிரசும் புதுவையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் செய்து விட்டனர். சிறப்புக்கூறு திட்ட நிதியை முறையாக பயன்படுத்தியது

  திமுக அரசு தான்.

  ஆனால் தாழ்த்தப்பட்டோருக்கான அந்நிதியை வேறு துறைப் பணிகளுக்கு மாற்றி செலவழித்தவர். இதனால் தாழ்த்தப்பட்டோர் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. மீனவர்களுக்கு சுனாமி நிதியை முறையாக பயன்படுத்தி வீடுகளைக் கட்டவில்லை.

  இந்நிலை மாற திமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார் நாஜிம்.

  மாநில அமைப்பாளர் டாக்டர் சுப்பிரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜாராமன்,

  தொகுதி பொறுப்பாளர் ரவி, விடுதலைச் சிறுத்தைகளை துணைச் செயலர் தமிழ்

  வளவன் ஆகியோர் உடன் சென்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai