சுடச்சுட

  

  சிலையை பிரதமராக வைத்தது ஆட்சி செய்தது காங்கிரஸ் :நாஞ்சில் சம்பத் கிண்டல்

  By புதுச்சேரி  |   Published on : 15th April 2014 03:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிலையை பிரதமராக வைத்து காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தியது என அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

  புதுவை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ஓமலிங்கத்துக்கு ஆதரவாக பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு பிரசாரம் செய்த அவர் பேசியதாவது:

  புதுவையை பிரெஞ்ச் ஆதிக்கத்தில் இருந்து அரவிந்தர், சுப்பையா ஆகியோர்  மீட்டனர். அதேபோல காங்கிரஸ் பிடியில் இருந்து இந்தியாவை மீட்டெடுப்பதற்கான தேர்தல்தான் இது

  மத்திய அமைச்சர் நாராயணசாமியும் சரி, புதுவையை சுற்றி வரும் ரங்கசாமியும் சரி, மாநில  மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. 17 ஆண்டாக மத்திய அரசில் கூட்டணி வைத்திருந்தபோது   புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தர முடியாத தி.மு.க., தலைவர் கருணாநிதி தற்போது துதான் பெற்றுத்தர போகிறாராம்.

  புதுவையில் நாராயணசாமிக்கும், ரங்கசாமிக்கும்  ரகசிய தொடர்பு உண்டு. அதற்காகத்தான் நாராயணசாமி கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ரங்கசாமி பதுங்குகிறார். தலைவர்களுக்கு ஆங்காங்கே சிலை வைப்பார்கள்.

  ஆனால் கா ங்கிரஸ் ஆட்சியில் சிலையையே பிரதமராக வைத்துள்ளனர். 58 சதவீத மக்கள் வறுமைக் கோட்டில் உள்ளனர். 52 சதவீத மக்கள் அறியாமை படுகுழியில் கிடக்கின்றனர். அவர்களை  மீட்டெடுக்க முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நல்ல ஆட்சி மத்தியில் அமைய  வேண்டும். அதற்கு மக்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார் நாஞ்சில் சம்பத். பிரசாரத்தின்போது செம்மலை எம்.பி, மாநில செயலாளர் அன்பழகன்  எம்.எல்.ஏ ஆகியோர் இருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai