சுடச்சுட

  

  நிதி அமைச்சர் சிதம்பரம் கூட்டம்: கண்ணன் எம்.பி. புறக்கணிப்பு

  By புதுச்சேரி  |   Published on : 15th April 2014 03:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கண்ணன் எம்.பி. புறக்கணித்து விட்டார்.

  புதுவை மாநில காங்கிரஸ் கட்சியில் தனி கோஷ்டியாக செயல்பட்டு வருபவர் மாநிலங்களவை உறுப்பினர் கண்ணன்.   தேர்தலில் நாராயணசாமியை வேட்பாளராக அறிவித்ததற்கு எதிர்ப்பு  தெரிவித்து கண்ணன் ஆதரவாளர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால்  கண்ணன் காங்கிரசுக்கு எதிராக முடிவெடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

  என்ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணனும், முதல்வர் ரங்கசாமியும்  கண்ணன் எம்பியை சந்தித்தனர். காங்கிரஸ் தரப்பிலும் கண்ணனை சமரசப்படுத்தும் முய ற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதன் எதிரொலியாக பத்திரிகையாளர்களை சந் தித்த கண்ணன், ஓரிருநாளில் தனது முடிவை தெரிவிப்பதாக கூறியிருந்தார்.

  இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு செஞ்சிசாலை பாரதிதாசன் திடலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில்  மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்துகொண்ட பொதுக்கூட்டம் நடந்தது. இந்த  பொதுக்கூட்டத்தில் கண்ணன் கலந்துகொள்ளவில்லை. இதனால் கண்ணன் யாரையும்  இத்தேர்தலில் ஆதரிக்காமல் மவுனமாகவே இருந்துவிடுவாரோ? எனக்கூறப்படுகிறது.

  அதேபோல கண்ணன் எம்பியின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் லட்சுமிநாராயணன்  எம்.எல்.ஏ. மாணவ பருவ காலம் முதல் லட்சுமிநாராயணன் கண்ணனுடன் இருந்து வரு கிறார். கண்ணனின் சொந்த தொகுதி காசுக்கடை (மறுசீரமைப்பிற்கு பின்புராஜ்பவன்  தொகுதியாக இருந்தது). இந்த தொகுதியில் 2001-ல் கண்ணன் போட்டியிடாமல்  லட்சுமிநாராயணனுக்கு விட்டுக்கொடுத்தார். அதோடு லட்சுமிநாராய ணனைஅமைச்சராகவும் ஆக்கினார். தொடர்ந்து லட்சுமிநாராயணன் காசுக்கடை  தொகுதியிலேயே போட்டியிட்டு வந்தார்.

  இத்தகைய சூழலில் கண்ணனுக்கும்,  லட்சுமிநாராயணனுக்கும் இடையே ஒரு இடைவெளி ஏற்பட்டது. முழுமையாகவே  கண்ணனை விட்டு லட்சுமிநாராயணன் பிரிந்திருந்தார். இருவருமே பிரிந்துவிட்டதாக  வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. இந்நிலையில் மத்திய அமைச்சர் நாராயணசாமி சில  நாட்கள் முன்பு ராஜ்பவன் தொகுதியில் பழைய சாராய ஆலை முன்பு பிரசாரம் செய்தார்.  அப்போது அவருடன் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏவும் இருந்தார.

  மத்திய அமைச்சர் சிதம்பரம் பேசிய பொதுக்கூட்டத்திலும் கண்ணன் பங்கேற்காவிட்டாலும், லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ.  பங்கேற்றார். இதனால் இவர்களிடையே பிரிவு ஏற்பட்டு லட்சுமிநாராயணன் அணி  மாறியிருப்பது உறுதியாகியுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai