சுடச்சுட

  

  புதுவையில் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா: தலைவர்கள் மாலை அணிவித்தனர்

  By புதுச்சேரி  |   Published on : 15th April 2014 03:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரசியல் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா புதுவையில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

  புதுச்சேரி சட்டப்பேரவை எதிரே உள்ள அவரது சிலைக்கு முதல்வர் என்.ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் பெ.ராஜவேலு, தி.தியாகராஜன், என்.ஜி. பன்னீர்செல்வம், வேட்பாளர் ராதாகிருஷ்ணன், அரசுக் கொறடா ஜி.நேரு மற்றும் என்.ஆர். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

  புதுச்சேரி மாநில திமுக சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நடைபெற்றது. சட்டப்பேரவை வளாகம் அருகே உள்ள அவரது சிலைக்கு மாநில அமைப்பாளர் டாக்டர்

  எம்ஏஎஸ்.சுப்பிரமணியன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.

  முன்னாள் முதல்வர் ஆர்.வி.ஜானகிராமன், வேட்பாளர் எச்.நாஜிம், நிர்வாகிகள் சீத்தா வேதநாயகம், எஸ்.பி.சிவகுமார், அனிபால் கென்னடி, இரா.சிவா, உள்பட பலர் கலந்து

  கொண்டனர்.

  அதிமுக தலைமை அலுவலகத்தில் டாக்டர் அம்பேத்கர் படத்துக்கு மாநில செயலாளர்

  ஆ.அன்பழகன் மாலை அணிவித்தார். வேட்பாளர் எம்.வி.ஓமலிங்கம், எம்.எல்.ஏக்கள்

  ஓம்சக்தி சேகர், எல்.பெரியசாமி, புருஷோத்தமன், ஆ.பாஸ்கர், அவைத் தலைவர் பாண்டுரங்கன், நகர செயலர் ரவீந்திரன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

  புதுவை பல்கலைக்கழகம் எஸ்.சி, எஸ்.டி ஊழியர்கள் நலச்சங்கம், சிறப்பு இட ஒதுக்கீடு பிரிவு சார்பில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் அவரது சிலைக்கு துணைவேந்தர் டாக்டர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி மாலை அணிவித்தார்.

  சங்கத் தலைவர் பிரவீன், பல்கலைக்கழக இயக்குநர் இந்துமதி, நிதி அலுவலர் விஜயகுமாரன், துணைப்பதிவாளர் சந்திரமூர்த்தி பேசினர்.

  தொழிலதிபர் சௌந்தர்ராஜன், பேராசிரியர் எஸ்.ஆர்.கண்ணன், மாணவர் பிந்து மாதவன்

  ஆகியோருக்கு அம்பேத்கர் விருது வழங்கப்பட்டது. அரவிந்தர் கண் மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனை சார்பில் கண் பரிசோதனை முகாம், ரத்ததான முகாம் நடைபெற்றது. 500-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai