சுடச்சுட

    

    புதுவை தனியார் இரும்பு நிறுவனத்தில் ரூ.14 லட்சம் மோசடி: 2 பேர் மீது வழக்கு

    By புதுச்சேரி  |   Published on : 15th April 2014 03:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை அருகே தனியார் இரும்பு பொருள் நிறுவனத்தில் பொருளை வாங்கிச் சென்று ரூ.14 லட்சம் அளவில் பணத்தை தராமல் மோசடி செய்ததாக 2 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    புதுவை அருகே உள்ள சுத்துக்கேணியில் பிரசாந்த்பன்சால் என்பரின், தனியார் இரும்பு மோல்டிங் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்திலிருந்து, கோயம்புத்துார் சாய்பாபா காலனியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர், பொருள்களை வாங்கிச் சென்று விற்று வந்துள்ளார்.

    இவர், பாலக்காடு கஞ்சிக்கோடு பகுதியைச் சேர்ந்த சிபி ஸ்டீல் நிறுவனத்தைச் சேர்ந்த சோமசுந்தரத்திற்கு பொருள்களை விற்றுள்ளதாகத் தெரிகிறது. இந்த வகையில், கடந்த ஆண்டுகளில், பிரசாந்த்பன்சாலின் நிறுவனத்திலிருந்து, ரூ.24 லட்சம் அளவில் பொருள்களை வாங்கிச் சென்ற அவர்கள், அதில், ரூ.10 லட்சம் மட்டுமே நிறுவனத்திற்கு செலுத்தியுள்ளதாகத் தெரிகிறது. மீதமுள்ள ரூ.14 லட்சம் பணத்தை வழங்காமல் அவர்கள் ஏமாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.

    இது குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி பிரசாந்த்பன்சால், புதுவை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில், காட்டேரிக்குப்பம் போலீஸார், சிவக்குமார், சோமசுந்தரம் மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai