சுடச்சுட

  

  புதுவை பல்கலைக்கழக பிரச்னை சீனியர் எஸ்பி நேரில் விசாரணை

  By புதுச்சேரி  |   Published on : 15th April 2014 03:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவை பல்கலைக்கழகத்தில் மாணவரை, பேராசிரியர்கள் தாக்கியதாக எழுந்த பிரச்னை குறித்து சீனியர் எஸ்பி ஓம்வீர்சிங் விசாரணை நடத்தினார்.

  புதுவை பல்கலைக்கழகத்தில், மகளிர் விடுதிக்குள் நுழைந்ததாக புகார் தெரிவித்து, மாணவர் ராதாகிருஷ்ணனை, அங்குள்ள பேராசிரியர்கள் இருவரும், பாதுகாவலர்களும் தனி அறையில் அடைத்து வைத்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.

  இதனையடுத்து பல்கலைக்கழக மாணவர்கள், வெள்ளிக்கிழமை பல்கலை நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மாணவரை தாக்கிய பேராசிரியர்கள், காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர் போராட்டம் நடத்தினர். பேராசிரியர் ஒருவரின் வீடு, கார் உடைக்கப்பட்டது.

  இது குறித்த புகார்களின் பேரில், பேராசிரியர்கள் ஹரிகரன், பூஷன்சுதாகர், பாதுகாவல் அலுவலர்கள் ஷியாம், குணசேகரன் மீது காலாப்பட்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பேராசிரியர் வீட்டை தாக்கியதாக 100 மாணவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

  இந்தப் பிரச்னை குறித்து, நிர்வாகத்தரப்பில் விசாரித்து, விரைந்து நடவடிக்கை எடுக்காவிடில் மீண்டும் போராட்டம் தொடருமென மாணவர்கள் அறிவித்து, சனிக்கிழமை கலைந்து சென்றனர்.

  இந்த நிலையில், இப்பிரச்னை தொடர்பாக புதுவை சீனியர் எஸ்பி ஓம்வீர்சிங், எஸ்பி பிரவீன்திரிபாதி ஆகியோர் காலாப்பட்டு பல்கலைக்கழகத்தில் திங்கள் கிழமை விசாரணை நடத்தினர்.

  சம்பவம் தொடர்பாக மாணவர்கள் விடுதி, பாதுகாவலர் அலுவலகம், சேதப்படுத்தப்பட்ட பேராசிரியர் வீடு உள்ளிட்டப் பகுதிகளுக்குச் சென்று அவர்கள் ஆய்வு நடத்தி விசாரணை மேற்கொண்டனர்.

  ஆய்வு குறித்து அவர்களிடம் கேட்டபோது, சம்பவம் தொடர்பாக இடங்களை நேரில் பார்த்து ஆய்வு செய்தோம். இது குறித்து காலாப்பட்டு போலீஸார் விசாரித்து நடவடிக்கை எடுக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai