சுடச்சுட

  

  மாநில வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்த பா.ம.க.விற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் வேட்பாளர் அனந்தராமன் பேச்சு

  By புதுச்சேரி  |   Published on : 15th April 2014 03:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மாநில வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்த பா.ம.க.வுக்கு மக்கள் வாககளிக்க வேண்டும் அக்கட்சியின் வேட்பாளர் ஆர்.கே.அனந்தராமன் கூறியுள்ளார்.

  புதுச்சேரி கதிர்காமம் பேரவைத் தொகுதியில் திங்கள்கிழமை பிரசாரம் செய்த அவர்

  பேசியதாவது:

  தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க., ஆகிய கட்சிகளை மக்கள் புறக்கணிக்க  முடிவெடுத்துவிட்டனர். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற  வைத்து மோடியை பிரதமராக்க வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். அதேபோல  புதுவையிலும் காங்கிரஸ், என்ஆர்.காங்கிரசை புறக்கணித்து மக்கள் தேசிய ஜனநாயக  கூட்டணி வேட்பாளரான எனக்கு ஆதரவு தர வேண்டும்.

  புதுவையில் ஒரு மாற்றத்தை உ ருவாக்க பா.ம.க.,விற்கு வாய்ப்பு தர வேண்டும் புதுவை மாநிலத்தின் வருவாய் கேள்விக்குறியாகவே உள்ளது. சாராய விற்பனை, பெட்ரோல் விற்பனையை நம்பியே மா நிலத்தின் பட்ஜெட் உள்ளது. வேலைவாய்ப்பை பெருக்க உற்பத்தியை உருவாக்கும் மாநிலமாக புதுவை மாற வேண்டும். பா.ம.க.,விற்கு வாய்ப்பளித்தால் புதிய  தொழில்கொள்கையை உருவாக்கப்படும்.

  புதுவையில் சலுகைகள், தொழில்பாதுகாப்பு இல்லாததால் பல தொழிற்சாலைகளை மூ டிவிட்டு சென்றுவிட்டனர். பா.ம.க.,வை வெற்றி பெறச்செய்தால் மத்திய அரசுடன் பேசி  தொழிற்சாலைகளை அமைத்து, அவர்களுக்கு சலுகைகளை பெற்றுத்தரப்படும். இதனால்  மாநிலத்தில் படித்த இளைஞர்களுக்கு நேரடியாகவும், மறைமுகவாகவும் வேலைவாய்ப்பு  ஏற்படுத்தி தரப்படும்.

  புதுவையில் உள்ள ஏஎப்டி, சுதேசி, பாரதி பஞ்சாலைகளுக்கு மத்திய அரசு  நிதி பெற்று ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்களாக மாற்றப்படும். இதன் மூலம் மா நிலத்தின் வருவாய் அதிகரிக்கும். வேலைவாய்ப்பு பெருகும். ஏஎப்டி பஞ்சாலையின்  கிளையை நெட்டப்பாக்கத்தில் அமைத்து அங்கு பட்டு நெசவுப்பூங்கா அமைக்க முயற்சி கள் மேற்கொள்ளப்படும்.

  பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் பேசி தகவல்  தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும். போர்க்கால அடிப்படையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா புதுவையில் அமைக்கப்பட்டு வேலையில்லா திண்டாட்டம்  ஒழிக்கப்படும். புதுவையை சுற்றுலாவில் மேம்படுத்த கேளிக்கை நகரம் என்ற திட்டத்தை  பா.ம.க., செயல்படுத்தும். இந்த திட்டம் மூலம் மாநிலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை  கவரும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

  இதனால் அந்நிய செலாவணியும்,  புதுவை மாநில வருவாயும் பெருகும். பா.ம.க.,வின் இந்த திட்டங்களால் புதுவைக்கு  வந்து செல்லும் மக்களும் அதிகரிப்பர். அவர்களால் மாநிலத்திற்கு கூடுதலாகவும் வருவாய்  கிடைக்கும். இதுபோன்ற நல்ல திட்டங்களை, மாநில வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்த பா.ம.க.,விற்கு மக்கள் ஒருமுறை வாக்களிக்க வேண்டும் என்றார் அனந்தராமன்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai