சுடச்சுட

  

  மீன்பிடி தடைக்காலம்: நிவாரண நிதியை உடனை வழங்க வலியுறுத்தல்

  By புதுச்சேரி  |   Published on : 15th April 2014 03:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மீன்பிடித் தடைக்காலம் அமுலுக்கு வருவதால் மீனவர்களுக்கான நிவாரண நிதியை

  தமிழக, புதுவை அரசுகள் உடனே வழங்க வேண்டும் என தேசிய மீனவர் பேரவை வலியுறுத்தி உள்ளது.

  இதுதொடர்பாக அதன் தலைவர் என்.இளங்கோ வெளியிட்ட அறிக்கை:

  இந்தியாவின் கிழக்குப்பகுதி முழுவதும் வங்கக் கடலில் செவ்வாய்க்கிழமை முதல் 45 நாள்கள் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.

  விசைப்படகு பொருத்தப்பட்ட மீன்பிடி விசைப்படகுகள், 24 அடி நீளம் முதல் 60 அடி நீளம் வரையிலான பைபர், மரம், மற்றும் இரும்பிலான விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு

  செல்ல இயலாது.

  இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் கோடிக்கணக்கான மீனவர்களுக்கு அன்றாட உயிர்வாழ்வுக்கு தேவையான உணவாதாரம் வழங்க வேண்டிய பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு.

  கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து இத்தடையை அமுல்படுத்தச் சொல்லி மத்திய அரசு வற்புறுத்தி வருகிறது. ஆனால் மத்திய அரசு சார்பில் மீனவர்களுக்கு எந்த உதவியும் தரப்படவில்லை.

  தமிழக-புதுச்சேரி அரசுகள் தடைக்கால நிவாரணம் வழங்கி வருகின்றன. புதுவை அரசு

  மீனவர்களுக்கு தலா ரூ.4 ஆயிரமும், தமிழக அரசு தலா ரூ.2 ஆயிரமும் தருகிறது. பொதுவாக ஆண்டுதோறும் இந்த தடைக்கால நிவாரண உதவி காலத்தோடு

  வழங்கப்படுதில்லை.

  நடப்பு ஆண்டிலாவது தடைக்கால நிவாரண தொகையை தடைகாலம் தொடங்கியவுடன்

  தமிழக-புதுவை அரசுகள் வழங்க வேண்டும் என்றார் இளங்கோ.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai