சுடச்சுட

    

    இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட 2 படகுகள் காரைக்கால் வந்து சேர்ந்தது

    By காரைக்கால்  |   Published on : 16th April 2014 10:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இலங்கை அரசு விடுவித்த காரைக்காலை சேர்ந்த 2 விசைப்படகுகள் செவ்வாய்க்கிழமை காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது.

    காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த மதிவாமன், வீரகுமார் ஆகியோரின் 2 விசைப்படகுகளும், நாகப்பட்டினத்தை சேர்ந்த 3 விசைப்படகுகளும் கடந்த 30.7.2013-ல் கடலில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது, இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டன. இதில் இருந்த காரைக்கால் மீனவர்கள் 14 பேர் உள்ளிட்ட நாகப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்களும்  கைது செய்யப்பட்டனர்.

    மீனவர்கள் கடந்த 21.9.2013-ல் விடுவிக்கப்பட்டு காரைக்கால் வந்து சேர்ந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட இவர்களது படகுகள் விடுவிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில்,  இவற்றை மீட்டுவர  காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் நால்வரும், மீன்வளத்துறையை சேர்ந்த  ஒருவரும், இந்திய, இலங்கை அரசுகளின்  அனுமதியுடன் இலங்கைக்கு படகில் சென்றிருந்தனர். காங்கேசன் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் திங்கள்கிழமை அதிகாலை விடுவிக்கப்பட்டது.

    இவற்றை இயக்கிக்கொண்டு செவ்வாய்க்கிழமை காலை 2 படகுகளும் காரைக்கால் வந்து சேர்ந்தன. காரைக்கால் மீனவளத்துறை துணை இயக்குநர் ந.இளையபெருமாள் மீனவர்களை வரவேற்றார்.

    பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் கடந்த 9 மாதங்களாக இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இதில் இருந்த என்ஜினை சேர்ந்த முக்கிய பொருள்கள் மற்றும் ஜிபிஎஸ் கருவிகள் அகற்றப்பட்டுவி்ட்டன. படகு பல மாதங்களாக பயன்பாடின்றி இருந்ததால், இயக்கம் தடைபட்டிருக்கிறது. பல லட்சம் ரூபாய் செலவு செய்து சீரமைக்கவேண்டியுள்ளது. கயிறு  கட்டி வேறு படகின் உதவியோடு இழுத்துவந்துள்ளோம் என தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai