சுடச்சுட

  

  திருமணங்களை பதிவு செய்ய பதிவுத் துறை அறிவுறுத்தல்

  By  புதுச்சேரி,  |   Published on : 16th April 2014 10:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவையில் திருமணப் பதிவு செய்யாமல் உள்ளவர்கள் உடனே சார் பதிவாளர் அலுவலகங்களைத் தொடர்பு கொண்டு பதிவு செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
   இதுகுறித்து மாவட்டப் பதிவாளர் அ.ராசரத்தினம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
   பொதுவாக நடைபெறும் திருமணங்கள் அந்தந்த பகுதியில் உள்ள பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால், தற்போது நடைபெறும் திருமணங்கள் பதிவுத் துறை அல்லது நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் பதிவு செய்யப்படாமல் உள்ளன.
   இதனால் பின்வரும் காலங்களில், அரசு அலுவலகங்களில் கேட்கப்படும் ஆவணங்களின் ஆதாரமாக, திருமணப் பதிவு சான்றிதழ் கேட்கும் நேரத்தில், திருமணத்தைப் பதிவு செய்யாதவர்கள் அவதிக்குள்ளாகிறார்கள்.
   எனவே, இதுநாள் வரை திருமணத்தை பதிவு செய்யாதவர்கள், அருகில் உள்ள பதிவுத் துறை அல்லது சார்பதிவாளர் அலுவலகத்தை அணுகி தங்கள் திருமணங்களை பதிவு செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
   சாரம், உழவர்கரை, வில்லியனூர், பாகூர், திருக்கனூர் பகுதியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களை அணுகி இதுகுறித்த உரிய தகவல்களை பெறலாம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai