சுடச்சுட

  

  புதுச்சேரி படைப்பாளர் இயக்கம் சார்பில் நூல் வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
   அம்பேத்கர் பிறந்த நாள், சித்திரை விழா, எழுத்தாளர் தேவிசங்கரியின் "நல்ல துணை' நூல் வெளியீடு உள்ளிட்டவை நடைபெற்றன. இயக்கச் செயலர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். இணைச் செயலர்கள் தாமோதரன், ஜமுனா முன்னிலை வகித்தனர்.
   செயற்குழு உறுப்பினர் மதிவாணன் வரவேற்றார். தாகூர் கலைக் கல்லூரி முன்னாள் முதல்வர் ராஜன் நூலை வெளியிட, புதுச்சேரி கூட்டுறவு புத்தக சங்கச் செயலாளர் கோ.முருகன் பெற்றுக்கொண்டார்.
   எழுத்தாளர் புதுவை பிரபா நூலாய்வு செய்தார். நூலாசிரியர் தேவிசங்கரி ஏற்புரை ஆற்றினார். "சட்ட மேதை அம்பேத்கர்' என்ற தலைப்பில் நடைபெற்ற போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. நிர்வாகிகள் விஜயலட்சுமி, செல்வன், கண்ணன், ஓவியர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai