சுடச்சுட

  

  புதுச்சேரி திமுக வேட்பாளர் எச்.நாஜிம் பாகூர் கொம்யூன் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
   மாநில திமுக அமைப்பாளர் எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். பாகூர் காட்டுக்குப்பத்தில் தொடங்கிய பிரசாரம், குருவிநத்தம், ஆராய்ச்சிக்குப்பம், மூர்த்திக்குப்பம், கன்னியக்கோவில், மதிகிருஷ்ணாபுரம், கடுவனூர், கரையாம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.
   தொகுதி செயலர்கள் பாண்டு அரிகிருஷ்ணன், ஏ.பாஸ்கர், மாநில நிர்வாகிகள் அமிர்தலிங்கம், தெய்வசிகாமணி, சு.சிவா, கல்பனா அபிமன்னன், பி.கண்ணன், ஜி.சின்னசாமி மற்றும் தோழமைக் கட்சியினர் உடன் சென்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai