சுடச்சுட

    

    புதுவைக்கு மாநில அந்தஸ்தை  ஜெயலலிதா பெற்றுத் தருவார்:  நடிகர் சரத்குமார் உறுதி

    By  புதுச்சேரி,  |   Published on : 16th April 2014 10:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவைக்கு தனி மாநில அந்தஸ்த்தை ஜெயலலிதா பெற்றுத் தருவார் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் உறுதி கூறினார்.
     புதுவை தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.வி. ஓமலிங்கத்தை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் திங்கள்கிழமை இரவு பிரசாரம் செய்தார். முத்தியால்பேட்டை, நெல்லித்தோப்பு உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் செய்து சரத்குமார் பேசியது: தமிழகம், புதுவையில் பல கூட்டணிகள் உருவாகியுள்ளன. இதில் விந்தையான கூட்டணி பாரதிய ஜனதா தலைமையில் அமைந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி.
     தமிழகத்தில் பாமகவுடனும், புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடனும் பாரதிய ஜனதா கூட்டணி அமைத்துள்ளது. இவர்களுக்குள் ஒற்றுமை இல்லாததால் ஒரே கூட்டணியில் இரண்டு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதிலிருந்து இந்த கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத, குழப்பமான கூட்டணி என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
     தேமுதிக தலைவர் விஜயகாந்த், "கடந்த சட்டசபை தேர்தலில் பாமக ஒரு ஜாதிக் கட்சி. அதனுடன் தேமுதிக கூட்டணி சேராது, தேர்தலுக்குப்பின் பாமக காணாமல் போய்விடும்' என்றார். தற்போது அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார்.
     கூடங்குளத்தில் இருந்து தமிழகம், புதுவைக்கு 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் அளிக்கப்படும் என மத்திய அமைச்சர் நாராயணசாமி, சென்னை விமான நிலையத்துக்கு வரும் போதெல்லாம் கூறினார். அவர் கூறிய மின்சாரம் இதுவரை வரவில்லை.
     தமிழக முதல்வர் ஜெயலலிதா சுட்டிக்காட்டும் ஆட்சி மத்தியில் அமையும். அப்போது அவர் புதுவைக்கு மாநில அந்தஸ்தை பெற்றுத் தருவார். இதற்கு வரும் தேர்தலில் அதிமுக வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றார் சரத்குமார். பிரசாரத்தின் போது வேட்பாளர் ஓமலிங்கம், அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai