சுடச்சுட

    

    புதுவை தனியார் மருத்துவக் கல்லூரிகளின் முதுநிலை 50 சத சீட்டுகள் உள்ளூர் மாணவர்களுக்கு கிடைக்க நடவடிக்கை - நாஜிம் வாக்குறுதி

    By காரைக்கால்  |   Published on : 16th April 2014 10:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலைக் கல்விக்கான 50  சதவீத சீட்டுகளை, புதுவை மாணவர்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என புதுவை திமுக வேட்பாளர் ஏ.எம்.எச்.நாஜிம் வாக்குறுதியளித்தார்.

    காரைக்காலில் செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அவர் நெடுங்காடு பகுதியில் வாக்காளர்களிடையே  பேசியது :  புதுவையில் காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியினால் மாணவர்கள் பெரும் பயனடைகிறார்கள் என கூறுகிறார்கள். இது முற்றிலும் தவறானது. புதுவை மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் அல்லாத எம்.டி., எம்.எஸ். போன்ற முதுநிலை படிப்புக்கான இடங்களில் 50 சதவீதத்தை அம்மாநிலத்திற்கு தரவேண்டுமென, இந்திய மருத்துவக் கவுன்சில் கூறுகிறது. புதுவையில் 300 இடங்கள் உள்ள நிலையில், ஏழை, எளிய 150 மாணவர்கள் படனடைவார்கள். ஆனால் காங்கிரஸ் அரசாக இருந்தாலும், என்.ஆர்.காங்கிரஸ் அரசாக இருந்தாலும் இதனை தனியார் கல்லூரிகளில் இருந்து பெற்று புதுவை மாணவர்களுக்கு தருவதில்லை. தனியார் கல்லூரிகளோ அதனை தலா ரூ.3 கோடி வீதம் விற்றுவிடுகிறது. இதில் இக்கட்சிகளும் உடந்தை. நான் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டால், இந்த ஒதுக்கீட்டை கண்டிப்பாக பெற்றுத்தருவேன்.

    தமிழகத்தில் கலைஞர்  காப்பீட்டுத் திட்டம் கொண்டுவந்ததுபோல், மத்திய அரசை வலியுறுத்து தாழ்த்தப்பட்டோர் பயனடையும் வகையில் அம்பேத்கர் பெயரில்  மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்  கொண்டுவருவேன்.

    புதுவை மக்கள் மீது அக்கறைகொள்ளாத காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தருவது, மக்கள் தங்களது சுமையை கூட்டிக்கொள்ள எடுத்த செயலாகிவிடும் என்றார் நாஜிம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai