சுடச்சுட

    

    மண்ணாடிப்பட்டில் என்.ஆர்.காங்கிரஸ் பிரசாரம்

    By  புதுச்சேரி,  |   Published on : 16th April 2014 10:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி சட்டப்பேரவை துணைத் தலைவர் டி.பி.ஆர்.செல்வம் செவ்வாய்க்கிழமை மண்ணாடிப்பட்டு தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
     செட்டிப்பட்டு, கூனிச்சம்பட்டு, மணலிப்பட்டு காட்டேரிக்குப்பம், பி.எஸ்.பாளையம், உள்பட பல்வேறு கிராமங்களில் அவர் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். அவருடன் என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் சென்றனர். இதே போல திருக்கனூரில் காங்கிரஸ் சார்பில் மகளிர் சுய உதவிக்குழு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாநில நிர்வாகிகள் கண்மன், செல்வகுமார் தலைமை வகித்தார். செய்தித் தொடர்பாளர் வீரராகவன் சிறப்புரை ஆற்றினார். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். நிர்வாகிகள் முத்துரங்கம், சண்முகம், செய்யது, ஜஹாங்கீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai