சுடச்சுட

  

  ரங்கசாமியை புதுவை மக்கள் புறக்கணிக்க வேண்டும்:  வைத்திலிங்கம் பேச்சு

  By  புதுச்சேரி,  |   Published on : 16th April 2014 10:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவை மக்கள் முதல்வர் ரங்கசாமியை புறக்கணிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் வி.வைத்திலிங்கம் கூறினார்.
   புதுவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், மத்திய அமைச்சருமான நாராயணசாமிக்கு ஆதரவாக எதிர்கட்சித்தலைவர் வைத்திலிங்கம் பிரசாரம் செய்தார்.
   மணவெளி, அரியாங்குப்பம், தேங்காய்திட்டு பகுதிகளில் திறந்த ஜீப்பில் வீதி, வீதியாக சென்று பிரசாரம் செய்து அவர் பேசியது:
   ரங்கசாமி முதல்வராக வரும்போதே நாராயணசாமி மந்திய அமைச்சராக இருந்தார். அவர் எதையும் தடுக்க முடியாது. நாம் மாற்றத்தை உருவாக்குவோம் என ரங்கசாமி வாக்குகளை பெற்று பதவிக்கு வந்தார். அப்புறம் ஏன் தற்போது நாராயணசாமிதான் அனைத்தையும் கெடுத்துவிட்டார் என பிரசாரம் செய்கிறார்?
   தற்போது மீண்டும் நாராயணசாமி மீது புகார் கூறி வாக்குகளை கேட்டு வருகிறார்.
   பள்ளி குழந்தைகளுக்கு ரொட்டி, பால் வழங்கப்படவில்லை. வாரம் 2 முட்டை வழங்கவில்லை. பள்ளிக்கு சீருடை தரவில்லை.
   புதுவையில் காங்கிரஸ் ஆட்சியில் ஹைமாஸ் விளக்குகள் போடப்பட்டன. அதில் 6 விளக்குகள் இருக்கும். அதில் ஒன்றுகூட எரியவில்லை. விவசாயிகளுக்கு விதை, உரம், பூச்சி மருந்து கிடைக்கவில்லை. பாசிக் இழுத்து மூடப்படும் நிலையில் உள்ளது.
   காங்கிரஸ் ஆட்சியில் ஒற்றை அவியல் அரிசி திட்டம், கல்வீடு கட்ட மானியம், சென்டாக் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை என பல்வேறு திட்டம் நிறைவேற்றப்பட்டது.
   இவை அனைத்தையும் ரங்கசாமி நிறுத்தினார். அவர் பாதியில் நிறுத்திய திட்டங்களான அரியாங்குப்பம் பாலம், அரசு மருத்துவக் கல்லூரி, மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை என அனைத்துத் திட்டங்களையும் காங்கிரஸ் அரசுதான் நிறைவேற்றியது.
   3 ஆண்டுகள் முடிந்தபின் தற்போது வந்து 2 ஆண்டில் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என கூறி பிரசாரம் செய்கிறார். பல்வேறு திட்டங்களை நிறுத்திய ரங்கசாமியை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai