சுடச்சுட

  

  100 சதம் தேர்தல் சுவர் விளம்பரம் இல்லாத மாவட்டமாக காரைக்கால் திகழ்கிறது - ஆட்சியர் அ.முத்தம்மா

  By காரைக்கால்,  |   Published on : 16th April 2014 10:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காரைக்கால் மாவட்டம் 100 சதம் தேர்தல் விளம்பரம் இல்லாத பகுதியாக  விளங்குவதாகவும், தேர்தல் அமைதியாக நடந்திட அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைக்கவேண்டுமென மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான அ.முத்தம்மா கேட்டுக்கொண்டார்.

  காரைக்கால் மாவட்ட அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான அ.முத்தம்மா, மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் மோனிகாபரத்வாஜ், மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர் எம்.அங்கமுத்து, தேர்தல் செலவினப் பார்வையாளர் சிவேந்திரகுமார் குப்தா, கூடுதல் ஆட்சியர் எல்.முகமது மன்சூர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

  கூட்டத்தினரிடையே மாவட்ட ஆட்சியர் அ.முத்தம்மா பேசியது : காரைக்கால் மாவட்டத்தில் முற்றிலும் தேர்தல் சுவர் விளம்பரம், போஸ்டர்கள் அழிக்கப்பட்டுவிட்டது. 100 சதம் தேர்தல் விளம்பரம் அழிக்கப்பட்ட மாவட்டமாக காரைக்கால் திகழ்கிறது. தேர்தல் துறைக்கு இதுவரை 84 புகார்கள் வந்துள்ளன. தேர்தல் நடத்தை விதி மீறல் தொடர்பாக அதில் 60 உள்ளன. ஒவ்வொரு வேட்பாளரின் செலவுகளை கண்காணிக்க தனி குழு செயல்படுகிறது. காரைக்காலில் வாக்கு சதத்தை அதிகரிக்க விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

  வாக்குச்சாவடிகளில் வைக்கக்கூடிய வெப் கேமராவை கையாளுவதற்காக 170 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. வாக்குப் பதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பு கட்சியினர் பிரசாரத்தை முடித்துக்கொள்ளவேண்டும். தேர்தல் துறையின் அதிகாரிகளுக்கு 3 கட்ட பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. வாக்குச் சாவடி நிலைய அதிகாரிகளிடம் பூத் சிலிப்புகள் வழங்கப்பட்டுவிட்டது. தேர்தல் அமைதியாக நடக்க அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார்.

  மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் மோனிகாபரத்வாஜ் பேசும்போது, காரைக்காலில் ஒரு கம்பெனி தொழில் பாதுகாப்புப் படையினர் வந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் தீவிரமான ரோந்துப் பணி நடக்கிறது. கடலில் 21 கிலோமீட்டர் மாவட்ட எல்லை வரை படகு மூலம் கண்காணிக்கப்படுகிறது. இதுவரை 181 புகார்கள் தேர்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பயன்பாட்டில் இருந்த 81 ஆயுதங்கள் காவல்துறையிடம் ஒப்டைத்துள்ளனர். சட்டம் ஒழுங்கு சீராக இருக்க எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai