சுடச்சுட

  

  அதிமுக-திமுக வேட்பாளர்களால் எதையும் சாதிக்க முடியாது

  By புதுச்சேரி  |   Published on : 17th April 2014 04:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அதிமுக-திமுக வேட்பாளர்களால் எதையும் சாதிக்க முடியாது என எதிர்கட்சித் தலைவர் வி. வைத்திலிங்கம் கூறினார்.

  புதுவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமிக்கு ஆதரவாக எதிர்கட்சித்தலைவர் வைத்திலிங்கம் உப்பளம், வாணரப்பேட்டை பகுதியில் திறந்த ஜீப்பில் சென்று ஆதரவு திரட்டிப் பேசியது:

  கூட்டுறவு நிறுவனங்கள் மது விற்பனை நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளன. ரங்கசாமி தொகுதியில் மட்டும் வளர்ச்சித் திட்டங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. காங்கிரஸ் ஆட்சியில் ஒற்றை அவியல் அரிசித் திட்டம், கல்வீடு கட்ட மானியம், மாணவர்களுக்கு சென்டாக் கல்வி உதவித்தொகை என பல்வேறு திட்டம் நிறைவேற்றப்பட்டது. இவை அனைத்தையும் ரங்கசாமி நிறுத்தினார். அவர் பாதியில் நிறுத்திய திட்டங்களான அரியாங்குப்பம் பாலம், அரசு மருத்துவக்கல்லுரி, மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை என அனைத்துத் திட்டங்களையும் காங்கிரஸ் அரசுதான் நிறைவேற்றியது.

  அதை மறந்துவிட்டு மீண்டும் மக்கள் முன் வெற்றி பெற்றுவிடலாம் என மனக்கணக்கு போடுகிறார். 3 ஆண்டு முடிந்தபின் தற்போது வந்து 2 ஆண்டில் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என கூறி பிரசாரம் செய்கிறார்.

  புதுச்சேரியில் நிறுத்தப்பட்டுள்ள அதிமுக, திமுக வேட்பாளர்களால் எம்.பி.யாகி தில்லிக்குச் சென்று எதையும் சாதிக்க முடியாது. என் ஆர்.காங்கிரஸ் வேட்பாளரும் வெளிநாட்டில்தான் இருப்பார். எனவே மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வரும் நாராயணசாமிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai