சுடச்சுட

    

    "காங்கிரஸின் தவறுகளையே என்.ஆர். காங்கிரஸூம் செய்கிறது

    By 'காரைக்கால்,  |   Published on : 17th April 2014 04:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காங்கிரஸ் கட்சி செய்த அதே தவறுகளை என்.ஆர். காங்கிரஸூம் செய்வதால் மக்களிடம் அது செல்வாக்கை இழந்துவிட்டது என்றார் புதுவை இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆர். விஸ்வநாதன்.

    நிரவி, திருப்பட்டினம், காரைக்கால் நகரப் பகுதியில் புதன்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் வாக்காளர்களிடையே பேசியது:

    காங்கிரஸையும், மதவாத கட்சியுடன் கூட்டணி அமைத்த என்.ஆர். காங்கிரஸையும் புதுவை மக்கள் புறக்கணிப்பது உறுதி. புதுவையில் அதிகமான மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றது காங்கிரஸ். ஆனால், புதுவை வளர்ச்சிக்கு எந்த திட்டத்தையும் அக்கட்சி கொண்டு வரவில்லை. ரங்கசாமி, சொன்னதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம் என்கிறார். நரேந்திர மோடி சொல்லாமலேயே குஜராத்தில் அப்பாவி முஸ்ஸிம்கள் பலியாக காரணமாக இருந்தவர். எனவே சிறுபான்மையின மக்கள் ரங்கசாமியின் செயல்பாட்டை உணர்ந்து இடது முன்னணியை ஆதரிக்க வேண்டும் என்றார்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயற்குழு உறுப்பினர் நாரா. கலைநாதன் பேசும்போது, மதவாதக் கூட்டணியில் உள்ளார் ரங்கசாமி. புதுவையில் ரங்கசாமி கட்சி தோல்வியடைவது நிச்சயம். சுயநலனுக்காகவே பாஜகவுடன் அவர் கூட்டணி அமைத்துள்ளார். தேசிய அளவில் காங்கிரஸ் வீழ்ச்சியடைந்துவிட்டது. எனவே காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகள் இந்த தேர்தலில் தோற்பது உறுதி என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai