சுடச்சுட

    

    "காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்

    By 'காரைக்கால்  |   Published on : 17th April 2014 04:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற ஆம் ஆத்மியை ஆதரிக்க வேண்டுமென அக்கட்சி வேட்பாளர் டாக்டர் ரங்கராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.

    காரைக்காலில் செவ்வாய்க்கிழமை இரவு மஸ்தான்பள்ளி வாசல் அருகே வாக்கு சேகரித்து அவர் பேசியது:

    பாஜகவும், காங்கிரஸூம் மக்களைப் பற்றி சிந்திக்காத கட்சிகள். நாட்டில் சாலை, குடிநீர் வசதிகளின்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. மக்களுடைய வரிப்பணத்தை நாட்டை ஆளும் அரசுகள் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன. பணத்துக்கு வாக்காளர்கள் விலை போய்விடக் கூடாது.என்.ஆர். காங்கிரஸ் பாஜகவிடம் அடிமையாகிவிட்டது. காங்கிரஸ் ஊழல் நிறைந்த கட்சி. இதுபோன்ற கட்சிகள் நாட்டை ஆளக்கூடாது.

    ராமர் கோயில் கட்டுவோம் என பாஜக கூறுகிறது. இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவிóக்கிறது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதுதான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. எனவே, காங்கிரஸூக்கு இதுகுறித்து பேசத் தகுதியில்லை. சிறுபான்மை மக்கள் இவற்றையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்து, காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸை புறக்கணித்து ஆம் ஆத்மிக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றார்.

    புதுவை மாநில ஆம் ஆத்மி கட்சி செயலர் ரவி சீனிவாசன், காரைக்கால் மாவட்ட பொறுப்பாளர் ஆனந்தகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai