சுடச்சுட

  

  புதுவை அருகே தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ்-நாம் தமிழர் கட்சியினருக்குமிடையே தகராறு ஏற்பட்டது.

  புதுவையில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த வகையில், தவளக்குப்பம்-பூர்ணாங்குப்பம் சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு அவர்கள் தேர்தல் பிரசாரம் செய்துள்ளனர். அப்போது காங்கிரசுக்கு எதிராக பேசியதால், அங்கிருந்த காங்கிரஸ் கட்சியினர் சிலர், பிரசார வாகனத்தை நிறுத்தி தகராறில் ஈடுபட்டனர். இதனால் நாம் தமிழர் கட்சியினருக்கும், காங்கிரஸாருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அச்சமடைந்த அப்பகுதி வியாபாரிகள் கடைகளை மூடினர்.

  தகவல் அறிந்து வந்த தவளக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தனசெல்வம் மற்றும் போலீஸார், காங்கிரஸ், நாம் தமிழர் கட்சியினரிடம் பேசி சமாதானப்படுத்தினர். இதனையடுத்து, பிரசாரத்தை முடித்துக்கொண்டு நாம் தமிழர் கட்சியினர் புறப்பட்டுச் சென்றனர். காங்கிரஸார் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai