சுடச்சுட

  

  புதுவையில் மத்திய அரசின் சாதனைகள் குறித்து காங்கிஸாரும், மத்திய அரசின் சோதனைகள் குறித்து என்.ஆர். காங்கிரஸாரும் போட்டியாக வண்ணப் பிரசுரங்களை வெளியிட்டு பிரசாரம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

  புதுவையில் காங்கிரஸ் வேட்பாளர் மத்திய அமைச்சர் நாராயணசாமிக்கும், முதல்வர் ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணனுக்கும் இடையே பலமான போட்டி நிலவுகிறது.

  நாராயணசாமியும், ரங்கசாமியும் எதிரெதிராக குற்றம் சாட்டி பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர். மத்திய அரசின் நிதியை தடுத்து மாநில அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக நாராயணசாமி மீது ரங்கசாமி புகார் தெரிவித்து வருகிறார். மத்திய அரசின் நிதியை பயன்படுத்தாமல் விட்டதாக ரங்கசாமி மீது, நாராயணசாமியும் குற்றம் சாட்டி வருகிறார்.

  நேரடியான இவர்களது விமர்சனங்கள் சலித்துவிட்ட நிலையில், தற்போது சாதனைகளையும், சோதனைகளையும் வண்ணப்படங்களுடன் பிரசுரங்களாக வெளியிட்டு அதனை மக்களிடம் கொண்டு சேர்த்து போட்டி பிரசாரம் செய்து வருகின்றனர்.

  காங்கிரஸ் பிரசுரம்: புதுவைக்கு நாராயணசாமி மூலம் மத்திய அரசு, 2008-09ஆம் ஆண்டில் ரூ.1,750 கோடியும், அடுத்த ஆண்டில் கூடுதலாக ரூ.500 கோடியும், அதற்கடுத்த ஆண்டுகளில் தலா கூடுதலாக ரூ.250 கோடியும் வழங்கியது. இறுதியாக 2012-13ஆம் ஆண்டு மத்திய அரசு வழங்கிய நிதியில், முறையான திட்டங்கள் இல்லாததால் புதுவை அரசு ரூ. 750 கோடியை திருப்பி செலுத்திவிட்டது.

  குடிநீர், சுற்றுலா, கல்வி வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் புதிய ரயில்கள் விட்டது என்று மத்திய அரசின் சாதனைகளை படத்துடன் பட்டியலிட்டுள்ளனர்.

  தொகுதி மேம்பாட்டு நிதியில், புதுவைக்கு ரூ.19 கோடி செலவிட்டுள்ளதாக பட்டியலிட்டதோடு, சாதனைகளைச் சொல்லி அவதூறுகளை முறியடிப்போம் என தெரிவித்துள்ளனர்.

  என்.ஆர். காங்கிரஸ் பிரசுரம்: என்.ஆர்.காங்கிரஸ் வெளியிட்டுள்ள பிரசுரத்தில், புதுவையின் வளர்ச்சிக்கு தடையாக இருந்த, மத்திய காங்கிரஸ் ஆட்சியின் சோதனைகள் குறித்து விளக்கியுள்ளனர்.

  மத்திய அரசு மானியத்தை குறைத்ததால், பெரிய தொழிற்சாலைகள் இடம் பெயர்ந்துவிட்டன. புதுவை வளர்ச்சியை மத்திய அரசு சீர்குலைத்து விட்டது. புதுவையின் தனித்தன்மை காக்கப்படும் என்ற நேருவின் வாக்குறுதி மீறப்பட்டது.

  கடந்த 23 ஆண்டுகள் எம்பியாக இருந்த நாராயணசாமி அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அவர், திட்டங்களை கொண்டு வராமல் அரசியல் செய்து புதுவை வளர்ச்சியை முடக்கினார்.

  காங்கிரசின் ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, மத்தியில் பாஜக ஆட்சி அமையவும், தடையின்றி புதுவையில் திட்டங்களை செயல்படுத்த என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்க வேண்டும். மாற்றத்திற்கான நேரம் இது அதனை மக்கள் பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai