சுடச்சுட

    

    தலைவர் படங்களுடன் தாம்பூலப் பைகள்:திமுக பிரமுகர் மீது வழக்கு

    By புதுச்சேரி  |   Published on : 17th April 2014 04:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திமுக தலைவர்கள் படத்துடன் திருமணத் தாம்பலப்பைகளை வைத்திருந்ததாக விழுப்புரம் திமுக பிரமுகர் மீது புதுவை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

    புதுவை தேர்தல் பறக்கும் படை அலுவலர் நடராஜன் தலைமையிலான குழுவினர், எல்லப்பிள்ளைச்சாவடி அருகே கடந்த சனிக்கிழமை வாகனச் சோதனை நடத்தினர்.

    அப்போது திமுக தலைவர் கருணாநிதி, ஸ்டாலின், பொன்முடி படங்கள் அச்சிட்ட திருமண தாம்பூலப் பைகளுடன் வந்தவரைப் பிடித்து விசாரித்தனர்.

    இதில், அவர் விழுப்புரம் மாவட்டம், திருமங்கலம் வடக்குப்பாளையத்தைச் சேர்ந்த சங்கர் (42) என்பதும், திமுக பிரமுகரான இவர், உறவினர் திருமணத்துக்காக இந்த தாம்பூலப் பைகளை வாங்கிச் சென்றதும் தெரிய வந்தது.

    இது தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி செயலாகும் என, தேர்தல் பறக்கும் படையினர் போலீஸில் புகார் கொடுத்தனர். இதனையடுத்து, 1,500 தாம்பூலப் பைகளையும் பறிமுதல் செய்துள்ள புதுவை ரெட்டியார்பாளையம் போலீஸார், இதுகுறித்து சங்கர் மீது செய்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai