சுடச்சுட

    

    தானே புயல் பாதிப்பு: மத்திய அரசு போதுமான நிதி தரவில்லை

    By புதுச்சேரி,  |   Published on : 17th April 2014 04:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தானே புயல் பாதிப்பின் போது மத்திய அரசு போதுமான நிதியை தராததால் மக்களுக்கு நிவாரண உதவிகளை முறையாக வழங்க முடியவில்லை என முதல்வர் ரங்கசாமி கூறினார்.

    வில்லியனூர் தொகுதிக்கு உள்பட்ட ஜி.என்.பாளையம், சுல்தான்பேட்டை, மூலக்கடை, வில்லியனூர் பகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணனை ஆதரித்து ரங்கசாமி பேசியது:

    புதுவை மாநிலத்தின் வளர்ச்சி மத்திய அரசின் கையில் தான் உள்ளது. மாற்றுக் கட்சி ஆள்வதால் மாநிலத்துக்கு வர வேண்டிய நிதியை வராமல் தடுத்தவர் மத்திய அமைச்சர் நாராயணசாமி. புதுவைக்கு வளர்ச்சித் திட்டங்களையோ, நிதி ஆதாரத்தையோ முறையாக அவர் பெற்றுத் தரவில்லை. நம்முடைய கடனை அவர் தள்ளுபடி செய்திருக்கலாம். இதற்காக நேரிலும், கடிதம் மூலமும் வற்புறுத்தியும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    தானே புயலால் புதுவை பெரும் பாதிப்பை சந்திதது. இதற்காக ரூ.125 கோடி நிதி கேட்டோம். ஆனால் மத்திய அரசு ரூ.55 கோடியை மட்டுமே வழங்கியது.

    புதிய தொழிற்சாலைகளை தொடங்குவதற்காக, தொழில் நகரம் அமைக்க திட்டம் தீட்டி அனுப்பிய போது மத்திய அரசு அதைத் தடுத்து விட்டது. துறைமுக மேம்பாட்டுத் திட்டத்தையும் தடுத்து விட்டது என்றார் ரங்கசாமி.

    வேட்பாளர் ராதாகிருஷ்ணன், வாரியத் தலைவர் ராஜேஷ், ரகு உள்பட பலர் உடன் சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai